நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 மார்ச், 2011
அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட மனித நேய மக்கள் கட்சி முடிவு
புவனகிரி : புவனகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது என மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்டத் தலைவர் மெஹராஜூதீன் தலைமை தாங்கினார். செயலர் அமானுல்லா முன்னிலை வகித்தார். துணைச் செயலர் அல்தாப் உசேன் வரவேற்றார். கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது, நகரின் மைய பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடைகளை நகருக்கு வெளியே மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக