பிற உலைகளுக்கு விரைவில் மின் இணைப்புப் பெறப்பட்டு விடும். அதே நேரம், புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் என்ற இரு எரிபொருட்களும் உள்ள 3ம் உலையில், நேற்று 14 மணி நேரம் தொடர்ந்து 2,400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4ம் உலையில் நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் குளிரூட்டும் முறைகள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து வருகிறது.
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ,"குளிரூட்டும் முறைகள் வெற்றியடைந்த பின், பாதிக்கப்பட்ட உலைகள் கான்கிரீட் கலவையால் ஒரேயடியாக மூடப்படும்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 8,133 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,272 பேர் காணாமல் போய்விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தில் மட்டும் 4,882 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒரு லட்சம் சிறுவர் சிறுமியர் இடம் மாறியுள்ளதாக, அந்நாட்டு சிறுவர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜப்பானின் புக்குஷிமா மாகாணத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு வினியோகமாகும் பால் விற்பனைக்கு, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவரை மற்றும் மொச்சை காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக