விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குருவி சுடுவது போல் பீரங்கிகளால் சுட்டு வீழ்த்தினர்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 பிப்ரவரி, 2012
சிரியாவில் அதிபருக்கு எதிராக கலவரம் நீடிப்பு: ஒரே நாளில் 260 பேர் கொன்று குவிப்பு
சிரியாவில் அதிபர் பஷிர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்தும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஹோம்ஸ் நகரில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து அங்கு பீரங்கிகளுடன் ராணுவத்தினர்
விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குருவி சுடுவது போல் பீரங்கிகளால் சுட்டு வீழ்த்தினர்.
விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குருவி சுடுவது போல் பீரங்கிகளால் சுட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து ஒரே நாளில் 260 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 36 வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. 1000 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் ஹோம்ஸ் நகரில் பதட்டம் நிலவுகிறது. நகர வீதிகளில் ராணுவத்தினர் பீரங்கிகளுடன் ரோந்து சுற்றி வந்தாலும் பொதுமக்களின் போராட்டம் ஓயவில்லை. தீவிரம் அடைந்துள்ளது.
இதற்கிடையே, சிரியா அதிபர் பஷிர் அல்-ஆசாத்தை பதவி நீக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் அரபு நாடுகளின் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில் தீர்மானம் வெற்றி அடைந்து அதிபர் ஆசாத் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சிரியாவின் நட்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தங்களது விட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின. எனவே அதிபர் ஆசாத்துக்கு எதிராக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. அதையடுத்து ரஷியா மற்றும் சீனாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிபர் ஆசாத்துக்கு எதிராக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக