#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

19 பிப்ரவரி, 2012

மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்: 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்



விருதுநகர்: ஐந்து மணி நேரம் சூரிய ஒளியை பெற்று, அதன் மூலம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், சோலார் மின் சக்தி சைக்கிளை, விருதுநகர் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், மெக்கானிக் துறை இறுதியாண்டு மாணவர்கள்
எம்.நாகராஜன், பி.கோட்டைராஜன், டி.நாகமூர்த்தி, எஸ்.கருப்பசாமி, டி. கருப்பசாமி, கே. கருப்பசாமி ஒன்றிணைந்து, சோலார் மின் சக்தி சைக்கிள் வடிவமைத்துள்ளனர். சூரிய வெப்பத்தை சோலார் பேனல் மூலம் சேகரித்து, அதை மின் சக்தியாக மாற்றி, பேட்டரியில் சேமித்து,மோட்டார் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கி உள்ளனர் .

30 வாட்ஸ் பவர் சைக்கிளுடன் கூடிய சோலார் பேனலை, சூரிய ஒளியில் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், தினம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம். வெயிலில் ஓட்டி சென்றால், அது மேலும் மின்சக்தியை சேகரித்து கொள்ளும். மின்சக்தி குறைந்து விட்டால், பெடலாலும் சைக்கிளை ஓட்டி கொள்ளலாம்.

மாணவர் எம். நாகராஜன் கூறுகையில்,""புராஜக்ட் ஓர்க்கிற்காக அனைவரும் சேர்ந்து,இந்த சைக்கிளை தயார் செய்தோம்.பெட்ரோல் விலையேற்றத்தால், சிரமப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை உருவாக்க ரூ.15 ஆயிரம் செலவு ஆகும்,'' என்றார். தகவலுக்கு, 87541 94958 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக