அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 பிப்ரவரி, 2012
ஐ.நா.மனித உரிமை ஆணையத் தீர்மானம்: இலங்கையை இந்தியா எதிர்க்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இலங்கையில் ஈழ பகுதியில் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து, பெண்களை கொடூர பாலியியல் பலாத்காரத்திற்கு இலக்காக்கி, மருத்துவமனைகள், தேவாலயங்கள், வீடுகள் என்று அனைத்து பகுதிகளிலும் மிக கொடூரமான போர் குற்றங்களை ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு புரிந்தது.
ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழுவும், டப்ளின் மக்கள் ஆணையமும், லண்டன் சேனல் 4 தொலைக்காட்சியும் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட மிகமோசமான இனஅழிவை, போர் குற்றங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளன. ஈழத்தில் நடைபெற்ற இந்த நுற்றாண்டின் மிக மோசமான இன பேரழிவை சர்வதேச விசாரணை ஆணையம் விசாரித்து போர் குற்றவாளிகளை தண்டிப்பது மிக அவசியமாகும் என இந்த பூர்வாங்க அறிக்கைகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தின் 19வது அமர்வில் சில நாடுகள் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க தீர்மானம் கொண்டுவரவுள்ளன. இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த தீர்மானத்தை வ-மையாக ஆதரிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
(எம்.ஹெச். ஜவாஹிருல்லா)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக