அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
08 பிப்ரவரி, 2012
பள்ளிவாசல் மீது செருப்பு வீச்சு,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 7 இரவு நடந்த விரும்பத்தகாத சம்பவம் வருத்தமளிக்கிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டு கொள்கிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகர், காந்தி நகர், கழுகுமலை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காளியம்மன், உச்சிமாகாளியம்மன் மற்றும் அம்மன் கோவில்களில் தை மாத கொடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த மக்கள் தீர்த்த நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கழுகுமலை சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள பெரியபள்ளிவாசல் அருகே ஊர்வலம் வந்தபோது பள்ளிவாசலை நோக்கி செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள் இதனை பார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பள்ளிவாசல் முன்பு திரண்டனர்.
அப்போது அங்கு வந்த சிலர் இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த கடைகள், லாரி, ஆட்டோக்கள அடித்து நொருக்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுதா, சொக்கலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் கடைகள், கார்கள் கொளுத்தப்பட்டன.
இருதரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இருபுறமும் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கலவரம் தீவிரமடைந்தது. சொற்ப அளவிலேயே இருந்த போலீசாரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சங்கரன்கோவில் தேர் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கலவர தகவல் கிடைத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே செல்ல முடியாததால் அவர்களும் அங்கேயே நின்றனர். இரவு 10 மணிக்கு டிஐஜி வரதராஜு, நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்தும்படி ஒலி பெருக்கியில் தெரிவித்தும் கலவரக்காரர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்படியும் கலவரம் கட்டுக்குள் வராததால் போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர். இதையடுத்து கலவரக்காரர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதனால் சங்கரன்கோவிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக