குறிப்பாக தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ1000 கோடி மதிப்பில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு, இப்பகுதியில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறுவதை தடுக்கும் வகையில் முந்திரி உள்ளிட்ட மரங்களை நட்டுவதற்கும் அவற்றை ஓர் ஆண்டு பராமரிப்பதற்ம் அரசே செலவுகளை அளிக்கும் என்ற அறிவிப்பு, நகர்புற வறுமையை போக்க முழுமையான திட்டம், கணினி வன்பொருள் உற்பத்தியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நிபுணர் குழு அமைப்பு போன்ற பயனுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன். முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். நாடாளுமன்ற நிலைகுழுவின் பரிசலனையில் உள்ள அணைகள் பாதுகாப்பு மசோதா 2010 26(1) பிரிவில் எந்த மாநிலத்தில் அணைகள் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் வரும் என கூறப்பட்டுள்ளது. இது தமிழக நலனிற்கு எதிராக உள்ளது. தமிழகம் பராமரிக்கும் முல்லைப்பெரியாறு அணை, பரம்பிகுளம் அணை, சிறுவாணி அணை, துணாகடவு அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியவை கேரளாவில் உள்ளன. அணைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் அது தமிழக நலனுக்கு எதிராக முடிந்து விடும். தமிழகம் பராமரிக்கும் 5 அணைகளும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும். இதனால் அணைகளை பராமரிப்பது, பாதுகாப்பது போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். இந்த பிரிவு தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை நன்கு உணர்ந்து அணை எந்த மாநிலத்தின் எல்லையில் இருந்த போதினும் எந்த மாநிலத்தின் நலனுக்காக அது கட்டப்பட்டதோ அந்த மாநில அரசின் பொறுப்பில் தான் அணையின் பாதுகாப்பும் அமைய வேண்டும் என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி மனமாற வரவேற்கிறது. மத்தியில் கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளும் இந்த திருத்தத்தைக் கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு,தேர்தலுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது வாக்களித்தது போல் ஜெருஸ்லம் செல்லும் சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களின் அனைத்து பிரிவினருக்கும் தமிழக அரசு பயண ஏற்பாடு செய்யும் என்று சென்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவில மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதற்கு சிறுபான்மை மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தது போல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அளவை 5 விழுக்காடாக வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்துவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல் சென்ற திமுக அரசு கொண்டு வந்து திருமண பதிவுச் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் சங்கடங்கள் நீக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கச்சதீவு மீட்பதே தமிழக மீனவர்களின் இழந்த உரிமையை மீட்க இயலும் என்று ஆளுநர் உரையில் மீண்டும் வ-யுறுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.எனது ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கச்சதீவில் மாண்புமிகு முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் கூறுகிறேன் கச்சதீவில் ஆண்டுதோறும் புனித அந்தோணியர் கோவில் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டு மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் அந்த திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்துக் கொள்வதற்காக அனைத்து மதங்களைச் சேர்ந்த 5000 பேர் செல்வார்கள். கடந்த காலங்களில் இந்த யாத்திரிகரகள் மீன் பிடி படகுகளிலும் வல்லங்களிலும் தான் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் பாதுகாப்பற்ற வகையில் பயணம் செய்கிறார்கள். இந்த ஆண்டு அந்தத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கு செல்லக்கூடிய பயணிகளுக்காக ஒரு கப்பல்(கோஸ் கார்டு) அல்லது தனியார் கப்பலை ஏற்பாடு செய்து அனைத்து யாத்திரீகர்களையும் அழைத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டுமென மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்கள் மாண்புமிகு அவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீப கால தமிழக வரலாற்றில் தொய்வின்றி தொடர்ந்து வரும் போராட்டமாக அணு உலை எதிர்ப்பு போராட்டம் அங்கு நடைபெற்று வருகின்றது. அப்பகுதி மக்களின் உணர்வுகளையும் அவர்கள் வைத்துள்ள கோரிக்கையின் நியாயத்தையும் நன்கு உணர்ந்த தாயுள்ளம் கொண்ட நமது முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பல முறை போராட்டம் நடத்தும் மக்களின் அச்சத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததற்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் காங்கிரஸ் கட்சி ஆளும் மராட்டிய மாநிலத்தில் ஜெய்தாபுரில் இதே போல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பிரித்விராஜ் சவுகான் அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. ஆனால் நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்களின் உணர்வுகளை மதிப்பவர் என்பதற்கு மற்றொரு எடுத்துக் காட்டாக தான் அவர் கூடங்குளம் அணுஉலை தொடர்பாக எடுத்துள்ள நிலைப்பாடு அமைந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டால் தமிழகத்தின் மின் தட்டுப்பாடே தீர்ந்து விடும் என்ற ஒரு போலியான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது உண்மையில்லை. இது குறித்து நான் சில ஆய்வாளர்களிடமிருந்து திரட்டிய விபரத்தை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் Installed capacity நிறுவப்பட்ட கொள்ளளவு 1000 மெகாவாட்தான். ஆனால் உற்பத்தி சதவிதம் 70 சதவீதம் இது 700 மெகாவாட் மின்சாரத்தை தரும், அதில் 70 சதவீதம் Load factor 50 சதவீதம் ஆகத்தான் இருக்கிறது. எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் 700 மெகாவாட்டில் கூடங்குளம் அணு உலைக்கும் அங்கு இருக்கக்கூடிய குடியிருப்புப் பகுதிகளுக்கும் சுமார் 35 மெகாவாட் சென்றுவிடும் இதற்குப் பிறகு பொது விநியோகத்திற்காக கிடைக்கக்கூடிய மின்சாரம் 665 மெகாவாட்தான் இதில் தமிழ்நாட்டின் பங்கு 45 சதவீதம் அதாவது 299.25 மெகாவாட்தான் அதாவது 300 மெகாவாட் இதிலே Transmission loss, Distribution loss என்று 20 சதவீதம் போய்விட்டால் உண்மையிலேயே தமிழகத்திற்குக் கிடைக்கக்கூடிய மின்அளவு 240 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டின் மொத்த மின் அளவு 16,285 மெகாவாட் இது 1 .75 விழுகாடு மட்டும்தான், கூடங்குளத்திலிருந்து நம்க்கு கிடைக்கப்போகும் மின்சாரம் 300 மெகவாட் மட்டுமே. இதற்காக நாம் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தி நமது மக்கள் கொடுக்கப்போகும் விலை மிக அதிகமானது. மத்திய அரசு நியமனம் செய்த நிபுணர் குழுவின் அறிக்கையை நானும் இணைத்தில் வாசித்து பார்த்தேன். கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்த அறிக்கை அமையவில்லை. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இந்த கூடங்குளம் அணு உலை சம்பந்தமாக கண்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ஒப்பந்தம் 2008-ம் போட்டிருக்கிறார்கள். அதைக்கூட அந்த நிபுணர் குழு என்னென்ன இழப்பீடு கிடைக்கும் என்பதைக்கூட வெளிப்படுத்தவில்லை இந்தக் கூடங்குளம் அணு உலையினுடைய வேஸ்ட்டை(கழிவை) என்ன செய்யப்போகிறார்கள் என்பதை மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய எந்த பதிலையும் அவர்கள் தரவில்லை என்பதை நான் இந்த நேரத்திலே நடிக்கிறார்கள். விளம்பரங்களில் நடிக்கும் நிபுணர் குழு உறுப்பினர்கள், தனியார் கல்லூரிகளுக்குச் சென்று விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த நிபுணர்கள் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நியமனம் செய்த நிபுணர் குழுவுடன் கருத்து பரிமாற்றம் செய்ய தங்களுக்கு ம்ஹய்க்ஹற்ங் அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருப்பது அவர்கள் நிலைப்பாட்டில் நியாயம் இல்லை, காங்கிரஸ் கட்சி தமிழர்கள் மீது கொலை வெறியில் கூடங்குளம் அணு உலையை திணிக்கின்றார்கள், ஆனால் மேற்கு வஙகத்தில் அணு உலை வேண்டாம் என்று தங்கள் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் சொன்னதும் அங்கு அணு உலை நிறுவும் திட்டத்தை கைவிட்டார் என்பதையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அணு உலை எதிர்ப்பாளர்களை கருத்தியலாக சந்திக்க இயலாமல் திருநெல்வேலியில் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினரை காங்கிரஸ்காரர்கள் பாராட்டியிருப்பது வெட்ககேடானது. தொகுதிப்பிரச்சனைகள்: 1.எனது இராமநாதபுரம் தொகுதியில் 3 நகராட்சிகள் உள்ளன. ஆனால் 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் இருப்பதில்லை, தற்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் கூடுதலாக கீழக்கரை நகராட்சியை கவனித்து வருகிறார். இராமேஸ்வரம் நகராட்சியில் நகராட்சிப் பொறியாளர் கூடுதலாக ஆணையாளர் பொறுப்பை கவனிக்கிறார் எனவே 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமனம் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 2.பாம்பன் பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் மையப் பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தி அழகிய காட்சிகளைப் பார்க்கின்றனர் இதன் காரணமாக விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக பாம்பன் பாலம் அருகே நிலப் பகுதியில் நல்ல உயரத்தில் காட்சி கோபுரங்கள் (Watch tower) ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் அதிலிருந்து கட-ன் அழகிய காட்சிகளைக் காண ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 3.பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தின் தடை உத்தரவு காரணமாக மிக நீண்ட காலமாக அங்கிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில்லை தடையுத்தரவு நீக்கி அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 4.எனது தொகுதியில் புதிதாக முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓய்வூதிய உத்தரவு வழங்க முடியாத நிலை உள்ளது. இதற்குக் காரணம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான ஒதுக்கீடு முடிவடைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எனவே, எங்கள் மாவட்டத்திற்கு முதியோர் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக