அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 பிப்ரவரி, 2012
ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில் இரும்பு குண்டு தாக்குதல்!
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர்.
பிசியான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும் ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து விடுவர். சில நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் இருப்பதை விட, கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.
இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ரயில் கூரை பயணத்தை தவிர்க்க, போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும், ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தற்போது மிகவும் அபாயகரமான ஒரு விபரீத முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதன்படி, ரயில் பாதையில் போதிய இடைவெளியில், கம்பிகளால் ஆன வளைவுகளை அமைத்து அவற்றில் சங்கிலியால் கட்டப்பட்ட பெரிய அளவிலான இரும்புக் குண்டுகளை தொங்க விட்டுள்ளனர்.
ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில் இந்த இரும்புக் குண்டுகள் தாக்கினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகள் ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
நன்றி.இதய பூமி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக