அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 பிப்ரவரி, 2012
நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும்: பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
சென்னை, பிப். 18-
நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும் வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து பட்டை நாமம் போட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமையில் சென்னை பனகல் மாளிகை முன்பு பட்டை நாமம் போராட்டம் நடந்தது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும் வழங்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்த நூதன போராட்டம் நடந்தது. போராட்டம் குறித்து வேலுசாமி கூறியதாவது:-
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கிறார்கள், முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா முயற்சி செய்கிறது. ஆந்திராவும் தண்ணீர் தர மறுக்கும் சூழ் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் மின்சாரம் வழங்க வேண்டுமா? அண்டை மாநிலத்தார் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடுகிறார்கள்.
நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும் வழங்க வேண்டும். அப்போது தான் இருளில் கிடக்கும் நமக்கு விடிவு கிடைக்கும். மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு எழிலன், குமாரவேல், இசை மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக