அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மசூதிக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு செய்ய தவறினால் வரும் இடைத்தேர்தலை புறக்கணிப்போம்."
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 பிப்ரவரி, 2012
சங்கரன்கோவில் கலவரம்: மமக தேர்தல் புறக்கணிப்பு!
"சங்கரன்கோவிலில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வரும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்போம்" என மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவிலில் வழிபாட்டுத்தலத்தினுள் செருப்பு வீசப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நேற்று மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முகமது முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"சங்கரன்கோவிலில் திருமணம், சடங்கு, திருவிழா போன்ற நாட்களில் வழிபாட்டு இடம் முன் பட்டாசு போடுவதும், மேளங்கள் இசைப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் வாணவேடிக்கை போட்டு வழிபாட்டு இடத்திற்குள் கற்களை வீசி இருக்கின்றனர். கலவரத்தை தூண்டி விடும் நோக்கில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு இருக்கின்றனர்.
அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மசூதிக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு செய்ய தவறினால் வரும் இடைத்தேர்தலை புறக்கணிப்போம்."
அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மசூதிக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு செய்ய தவறினால் வரும் இடைத்தேர்தலை புறக்கணிப்போம்."
மேற்கண்டவாறு முகமதுமுஸ்தபா கூறினார்.
நன்றி.இந்நேரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக