இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
"உயிரைக் காப்பாற்றவும், மானத்தைக் காக்கவும் ராஜலட்சுமியும் சிவரஞ்சனியும் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதேபோல ஒவ்வொரு பெண்களும், தங்களுக்கு வரும் ஆபத்தை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும்.
பொதுவாக தாக்கிய நபர் மீதுதான் வழக்குப் பதியப்படும். ஆனால் இந்தச் சம்பவத்தில் உயிரைக் காப்பாற்றவும் மானத்தைக் காக்கவும் போராடியதற்காக ராஜலட்சுமி, சிவரஞ்சனி மீது வழக்குப் பதியப்படவில்லை. மாறாக, கொள்ளையடிக்க வந்த நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு முருகன் மீது மானபங்கம், கொலை முயற்சி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அன்னியரிடம் ஆபத்தில் சிக்கும்போது, உயிரைக் காப்பாற்றவும், மானத்தைக் காக்கவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றார் சைலேந்திரபாபு.
பின்னர் அவர், சிவரஞ்சனிக்கு தங்கப் பதக்கமும், ராஜலட்சுமிக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். பிளஸ் 2 படிக்கும் சிவரஞ்சனி தேர்வில் வெற்றிபெற வாழ்த்து கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக