அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
21 பிப்ரவரி, 2012
அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டில் கொண்டுவரப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதருக்கு, பாக். வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி கண்டனத்தை தெரிவித்தது. பாகிஸ்தானிற்குட்பட்ட தென்மேற்கு மாகாணமான பாலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களே சுயமாக முடிவு வெடுக்கவும் தனி நாடு கோரவும் உரிமை உண்டு என தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டின், பிரதிநிதிகள் சபையில் கடந்த 18-ம் திகதி, டானா ரோக்ராபச்சர், லூயி்ஸ் கோஹர்மெட், ஸ்டீவ்கிங் ஆகிய மூன்று எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.
அதில் பலுசிஸ்தான் வாழ் மக்கள் தங்களே சுயமாக முடிவு எடுக்க வரலாற்று பூர்வமான உரிமை உண்டு என கூறினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பாக்.பிரதமர் யுசுப்ராஸா கிலானி கூறுகையில், நாட்டின் இறையான்மைக்கு எதிரான செயல் என கூறினார்.
வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கூறுகையில், எங்கள் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள இயற்கை வளங்களை அபகரிக்கும் நோக்குடன் தான் அமெரிக்கா இப்படி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கான அமெரி்க்க தற்காலிக தூதர் ரிச்சர்ட்டு ஹோக்லாண்டை நேரில் அழைத்தது.
அதி்ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், எம்.பி.க்கள் மூவர், பாலுசிஸ்தான் குறித்து தீர்மானம் கொண்டுவர எந்த வகையிலும் உரிமையில்லை, இது இருநாடுகளிடையே நட்புறவை சிதைக்கும் செயல், ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தனது கண்டனத்தை தெரிவித்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலரும் இத்தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக