உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருப்பவர்கள் பல்வேறு இடையூறுகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடல் கூறு நிபுணர் ஆர் தர்ஸ் ஸ்டோன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
கடந்த 2008 முதல் 2010-ம் ஆண்டுவரை குண்டு மனிதர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சாதாரண அளவு எடையை கொண்டவர்களை விட குண்டு மனிதர்கள் 254 சதவீதம் கூடுதலான உடல் வேதனையை அனுபவிப்பது தெரிய வந்துள்ளது. முதுகு வலி, தலைவலி, இடுப்பு வலி, நாள்பட்ட நோய்கள் மற்றும் டென்ஷன் போன்ற நோய்களால் கஷ்டப்பட்டு வருகின்றனர். குண்டானவர்களின் உடல் எடை, உயரம் போன்றவற்றை கணக்கிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக