அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
19 பிப்ரவரி, 2012
குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதியின் திமிர் வாக்குமூலம்!
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்த, ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, கமல் சவுகான், 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளான். நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டுகளை டெல்லிக்கு கொண்டுவந்தோம். மேலும், மத்தியபிரதேச மாநிலம் பாங்க்லியில், 2006-ஆம் ஆண்டு பலருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது.
கொலைச் செய்யப்பட்ட சுனில்ஜோஷி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். ஃபரீதாபாத்தைச் சார்ந்த 8 பேருக்கு 2006 மார்ச் மாதம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி வழங்கப்பட்டது. நான், ராம்ஜி கல்சங்கரா, சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா ஆகியோரும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டோம். சம்ஜோதாவில் வெடிக்குண்டை நிறுவ நான்கு தினங்களுக்கு முன்பாக 2007 பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தூரில் இருந்து லோகேஷ் சர்மா என்னை இந்தூர் ரெயில்வே நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.ரெயில்வே ஸ்டேசனில் லோகேஷ் சர்மா இரண்டு சூட்கேஸ்களுடன் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் நானும், லோகேஷும் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ஸ்டேஷனை அடைந்தோம்.
அன்று மாலை நாங்கள் சூட்கேஸ்களுடன் பழைய டெல்லி ரெயில்வே ஸ்டேஷன் சென்றோம். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனை அடைந்தபொழுது லோகேஷ் ஒரு சூட்கேசை கம்பார்ட்மெண்டில் வைத்துவிட்டு வந்தார். பின்னர் என்னிடமிருந்து சூட்கேசை வாங்கி வேறொரு கம்பார்ட்மெண்டில் வைத்து விட்டு வேகமாக திரும்பிவந்தார். இவ்வேளையில் எங்கள் குழுவில் இருந்து இதர இரண்டு நபர்கள் சூட்கேஸ்களுடன் ப்ளாட்ஃபாமில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை அடையாளம் கண்டபோதிலும் பேசிக்கொள்ளவில்லை. வேகமாக நாங்கள் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிவிட்டோம்.’ இவ்வாறு சவுகான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
குண்டு வைத்த அந்த இரண்டு நபர்களில் ஒருவர் நாஸிக்கை சார்ந்தவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டுபிடித்துள்ளது. லோகேஷ் சர்மாவோ தற்போது சிறையில் உள்ளார். சுவாமி அஸிமானந்தா, சுனில்ஜோஷி, ராம்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் மீது தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவர்களில் கல்சங்கரா மற்றும் டாங்கே ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்டார். அஸிமானந்தா சிறையில் உள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக