அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 பிப்ரவரி, 2012
உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்
ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது.
மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
இந்நூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக