#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 ஜனவரி, 2011

சென்னை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்


சென்னை : கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு, முதல் பிரசவத்திலேயே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.


சென்னை, கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை, வர்தமான் கார்டனை சேர்ந்தவர் ஆனந்த்(28). தனியார் நிறுவன சேல்ஸ்மேன். இவரது மனைவி சாந்தி(24). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகள், குழந்தை பாக்கியம் வேண்டி பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். பல மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்தாண்டு சாந்தி கர்ப்பமடைந்தார். கடந்த 28ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் பிரசவத்திலேயே நான்கு குழந்தைகள் பிறந்தன. அதில், இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள். மருத்துவமனையில் சாந்தியும், அவரது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.


சாந்தியின் கணவர் ஆனந்த் கூறியதாவது: கடவுள் அருளால் நான்கு குழந்தைகள் கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 5,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். குடும்ப செலவுகளுக்கே அந்த பணம் போதுமானதாக இல்லை. நான்கு குழந்தைகளுக்கு பால், மருந்து, ஆடைகள் உள்ளிட்ட பராமரிப்பு செலவிற்கு பணம் தேவைப்படும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை நினைத்தால், குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்றே தெரியவில்லை. எனவே, எனது குழந்தைகள் பராமரிக்க தேவையான உதவிகளை அரசு தரப்பில் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ஆனந்த் கூறினார்.

நன்றி.தினமலர்

ஜனநாயகம் படும் பாடு!

நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் கணக்குப் பார்த்தால் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இவர் சுமார் 15% வாக்குகளே பெற்றிருப்பார். அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இவர் வெறும் 8% வாக்குகளே பெற்றிருப்பார். இவர் எப்படி அந்தத் தொகுதியின் பெருன்பான்மை மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?

ஆக, பெருன்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நாட்டை ஆளுகிறார்கள் – ஜனநாயக ஆட்சி என்பது வெறும் கேளிக் கூத்தாகவே இருக்கிறது. உண்மையில் நாட்டின் மிகச் சிறுபான்மையினரால் அதாவது வாக்களிக்க உரிமை பெற்றவர்களில் வெறும் 7% அல்லது 8% மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே ஆட்சியில் அமர்கிறார்கள். ஆட்சியில் அமரும் ஆட்சியாளர்களும் இந்த ஜனநாயக ஆட்சி முறையில் மயங்கி, பெரும்பான்மையினர்களின் மனம் கோணாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் நீதியான ஆட்சிக்குப்பதிலாக அநீதியான ஆட்சி நடத்த முற்படுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு சமீபத்தில் சேது கால்வாய்த் திட்டத்தில் நடுவண் அரசு நடந்து கொண்ட முறையாகும்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னால் நம் தாய்நாடான இந்திய நாட்டுடன் இலங்கையும் இணைந்து லெமூரியா கண்டம் என்றே அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கால ஓட்டத்தில் அதில் சில பகுதி நீரில் அமிழ்ந்து இலங்கையும் இந்தியாவும் வேறு வேறு ஆனது. இதற்கும் நமது காலத்தில் இப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி நிலப்பகுதி நீரில் அமிழ்ந்து காணாமல் போனது பெரியதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மனித குலத்தின் ஆதித் தந்தையை கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஓரிறைவனின் அறிவிப்புப்படி இறக்கப்பட்டு வாழ்ந்த பகுதியும் இதுவென்றே கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீரில் அமிழ்ந்த பகுதி ஆதம் பாலம் (Adam’s Bridge) என்றே நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. நியாயப்படி கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அந்த ஆதம் பாலத்தைக் காக்க முன்நின்று போராட வேண்டும். ஆனால் அவர்களோ நாட்டின் நலன் கருதி, அதாவது கப்பல் போக்கு வரத்துக்கு சேது கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்ற நோக்கில் அதற்கு துணை நிற்கிறார்கள். ஆதத்தைப் பற்றி இறைவனின் இறுதி வழிகாட்டல்நூல் அல்குர்ஆனில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமர் என்பவர் புராண காவியங்களில் கூறப்பட்ட ஒருவராக இருக்கிறாரே அல்லாமல் ஹிந்துக்களின் வேதங்களில் காணப்படும் ஒரு பெயரும் அல்ல. ஹிந்து வேதங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆதம் என்ற பெயர் கிடைத்தாலும் ராமர் என்ற பெயர் கிடைப்பது அரிது. மேலும் ராமர் பாலம் என்று கட்டப்பட்டதற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்த உண்மையைத்தான் நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ஆனால் இதை மறுத்து இந்தியாவின் பெருன்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு மாற்றமான அறிக்கை இது என பா.ஜ.க. போன்ற அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் மக்களிடையே செய்தி பரப்பிய உடனேயே நடுவண் அரசு உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்த ராமர் பாலம் பற்றிய உண்மை அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது அந்த அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தும், பெருன்பான்மை மக்களின் ஓட்டு வங்கி கிடைக்காமல் போய்விடும் என அஞ்சி நடுவண் அரசு அந்த உண்மையைான அறிக்கையை திரும்பக் பெற்றுக் கொண்டது. இப்படி ஜனநாயக நாட்டில் பெருன்பான்மை மக்களை திருப்திப்படுத்த பல அநியாயங்கள், அக்கிரமங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. நமது நாட்டில் வன்முறைச் செயல்கள், தீவிரவாதம், குண்டு வெடிப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றீசல் போல் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், மத்திய, மாநில அரசுகள் பெருன்பான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் புலன் விசாரனைகளை நடத்துகின்றனவே அல்லாமல், நடுநிலையோடு உண்மையைக் கண்டறியும் நோக்கில் புலன் விசாரணைகளை நடத்துவதில்லை. இதற்கு அடிப்படைக்காரணம் இந்த தவறான ஜனநாயக ஆட்சி முறையே தான். அதாவது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடப்பதால், ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான ஆட்சியே நடைபெறுகிறது. அனைத்து மக்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வரும் அனைத்து மக்களின் ஒரே இறைவனின் வழிகாட்டலின்படியுள்ள ஆட்சி நடை பெற்றால் மட்டுமே நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், சுபீட்சம் ஏற்பட வழி பிறக்கும்.

நன்றி. அந்நஜாத்

30 ஜனவரி, 2011

தொழாதவன் முஸ்லிம் அல்ல

Post image for <span title=

தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.

ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்

நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காபிராகி விட்டான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்:திர்மிதீ, நஸயீ

தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதீ

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.
சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

29 ஜனவரி, 2011

தற்போதைய தலைமை நிர்வாக குழுவிற்கு ஓர் ஆண்டுக் கால பதவி நீடிப்பு- எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக பொதுக் குழுவில் முடிவு

தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் மறுநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் பொதுக் குழு தொடங்கியது. பின்னர் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி சென்ற 2009 ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழு முதல் இந்த பொதுக் குழு வரையிலான செயற்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். இதன் பின் பொதுக்குழு தீர்மானங்களை தலைமை கழக நிர்வாகிகள் முன்மொழிந்தார்கள். தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமைப்புத் தேர்தல் தொடர்பாக செயற்குழு தீர்மானத்தை முன்மொழிந்து பேச சில செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி பெற்று பேசினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அஸ்லம் பாஷா, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் மைதீன் சேட் கான், மதுரை மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜபருல்லாஹ், வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமுமுக சகோதரர்கள் சார்பாக சவுதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் இது முக்கியமான காலக்கட்டம். சட்டமன்றத் தேர்தலையும் உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் எதிர்நோக்கும் இந்த சூழலில் தற்போதைய தலைமை நிர்வாக குழு தொடர்வது தான் அமைப்பு மற்றும் சமுதாய நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஓர் ஆண்டுக் காலத்திற்கு தற்போதைய தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பொதுக் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்கள். செயற்குழு முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு ஏகமனதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் ஜனவரி 2012 வரை தலைமை நிர்வாகிகளாக நீடிப்பார்கள்.




இதே நாளில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று அக்கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது நன்றியுரை ஆற்றினார்.
மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த இரு பொதுக்குழுக்களும் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வரவேற்கும் வண்ணமையமான வரவேற்பு பலகைகள் காஞ்சி தெற்கு மாவட்டத்தினரால் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநில மாநாடு போல் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுக்குழு திடல் மக்களால் நிரம்பி வழிந்தது. பொதுக்குழு திடலில் தொழுகை இடம், ஒழுச் செய்யும் வசதி, கழிப்பறை வசதி முதலியவை கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் பொதுக் குழு ஏற்பாடு பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் எம். யாகூப், மாவட்ட செயலாளர்கள் யுசுப் சுலைமான். காமராஜபுரம் ஹைதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சைபுதீன் ஆகியோர் வழிகாட்டலில் மாவட்ட சகோதரர்கள் மிக சிறப்பான முறையில் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோரின் நிறைவுரைகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாக டானிக் அமைந்தது. உடனடியாக சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகளை மறுநாளே தொடங்குவது என்ற உற்சாகத்துடன் அவர்கள் கலைந்துச் சென்றனர்.

28 ஜனவரி, 2011

தமுமுக-மமகவின் கூட்டு செயற்குழு

ஜனவரி 28 இன்று தமுமுக தலைமையகம் அருகே ஆயிஷா மஹாலில் தமுமுக-மமகவின் கூட்டு செயற்குழு நடைபெற்றது.


27 ஜனவரி, 2011

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்-வேன்களில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 62வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுக தலைவர் ''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நாளாக குடியரசு தினம் விளங்குகிறது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உலகின் தலைசிறந்த சட்டமாக விளங்குகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மை, பேச்சுரிமை, ஜனநாயகம் சிறுபான்மை நலன் முதலிய கோட்பாடுகள் நமது நாட்டில் சிறந்த முறையில் பேணப்படுவதற்கு இத்தினத்தில் உறுதி எடுப்போமாக. இதேநேரத்தில் அதிகாரத்தையும், பணபலத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்குவோரை வாக்குச்சீட்டு வலிமையைப் பயன்படுத்தி உரிய தண்டனை அளிப்பதற்கும் நாம் உறுதி எடுப்போமாக'' எனவும், '''தமுமுக சார்பில் கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுகவின் 9 2வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்கள், மாநகர, நகர மற்றும் கிளைகளில் இரத்ததான முகாம்களும், மருத்துவ முகாம்களும், மரம் நடு விழாக்களும் நடைபெறுகின்றன'' என அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியின் போது தமுமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி. மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மதுரை கௌஸ், வடசென்னை மற்றும் துறைமுகப் பகுதி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

24 ஜனவரி, 2011

துபாயில் உலகின் உயரமான ஹோட்டல் திறப்பு: ஒரு டீ ரூ.4,557

Atmosphere
துபாய்: உலகிலேயே உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபாவின்122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.

இந்த உயரமான உணவகத்தின் பெயர் அட்மாஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.

உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம். இங்கிருந்து அமீரகத்தின் வானவிளிம்பைக் காணலாம்.

இந்த சொகுசு உணவகத்தில் பிரைவேட் டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 62. 65 கொடுக்க வேண்டும். மேலும், மதிய வேளையில் டீ குடிக்க ரூ. 4 ஆயிரத்து 557. 75 பைசா கொடுக்க வேண்டும்.

இது தவிர பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வேண்டுவோர் தலைக்கு ரூ. 2 ஆயிரத்து 481.69 பைசா கொடுத்தால் போதும்.

நன்றி.தட்ஸ் தமிழ்

23 ஜனவரி, 2011

சிந்திக்க வைத்த சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனின் கிருபையால் ஜனவரி 21 அன்று துபை சலஹுதீன் சாலையில் உள்ள கல்ப் ஏர் பில்டிங்கில் மார்க்கத்தை அறிந்துக்கொள்வோம் என்ற தலைப்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது,
நிகழ்விற்கு மூத்த சகோதரர் கீழை ஜமீல் அவர்கள் தலைமை தாங்கினார்கள், சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் சிறப்புரையற்றினார்கள், தனது உரையில் மார்க்கத்தை அறிந்துகொள்வதற்கு நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் கொண்டிருந்த ஆர்வத்தையும் இன்றைய சமுதாய மக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய ஆர்வக்குறைவையும் எடுத்துரைத்து சிந்திக்கவைத்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலம் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் துபை மண்டல தமுமுக தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் உள்பட மண்டல நிர்வாகிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மண்டல செயலாளர் சகோ.இப்ராஹீம், சகோ.அதிரை ஜமால், பொறையார் ஜகரிய்யா உள்பட ஏகத்துவ சகோதரர்கள் கொட்டும் மழையையும் மீறி பெரும் திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்து பயனடைந்தார்கள். எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
DSC00082.JPG

21012011(001).jpg

21012011(003).jpg

நன்றி.மைதின்

இந்தியக் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு:தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதால் கச்சத்தீவுப் பகுதியை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் நேற்று ஜெயக்குமார் என்ற தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகப் பெரும் வேதனையை மனிதநேயமுள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் என்ற தமிழக மீனவர் இலங்கை கடற்படையியனரால் ஒரு சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டு அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு முன்பு இப்போது ஜெயக்குமார் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய கடலோர காவல்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர்மா நேற்றைய தினம் தமிழக முதலமை‌ச்சரை சந்தித்து தமிழக மீனவர்களின் நலன்களை காப்போம் என்று உறுதி அளித்த அதே தினத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதே போல் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பிரதமரை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அதே நாளில் இலங்கை கடற்படை தமிழக மீனவர் ஜெயக்குமாரை சுட்டுக் கொன்றுள்ளது.

இது இலங்கை அரசின் திமிர்த்தனத்தின் எடுத்துக்காட்டாகவும் இந்தியவை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதை உணர்த்துவதும் போல் அமைந்துள்ளது. இது வரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோல் இப்போது மீனவர் ஜெயக்குமார் படுகொலைக்குப் பிறகும் சம்பிரதாயமாக தமிழக முதலமை‌ச்சர் மத்திய அரசுக்கு தனது கோரிக்கையை வைக்க மத்திய அரசின் சார்பாக நிதி அமைச்சரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்குமேயானால் கச்சத்தீவுப் பகுதியை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அப்பகுதியில் இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட முன்வர வேண்டும் எ‌ன்று ஜவாஹிருல்லாஹ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

22 ஜனவரி, 2011

"ஏடிஎம்"இயந்திரத்தில் எந்தநேரத்திலும் பால்

தகவல்தொழில்நு‌ட்பத்தில் சிறந்து விளங்கும் மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் மற்றுமொரு பரிமாணமாக, "எனி டைம் மில்க்" எனும் பால் மற்றும் பால் பொருட்கள் 24 மணிநேரமும் கிடைக்கத்தக்க வகையில், மெசின்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவ பால் விற்பனை சங்கங்களின் தலைவர் ராம்பாவு துலே கூறியதாவது, குஜராத் மாநிலத்தில், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. குஜராத்தில் சுற்றுப்பயணம் ‌மேற்கொண்ட தாங்கள், இங்கும் இதுபோன்ற மெசின்களை அமைக்க திட்டமிட்டதாகவும், இதன் ஒருகட்டமாக, புனேயில் இந்த ஏடிஎம்களை அமைக்க உள்‌ளோம். இதன்மூலம், எந்தநேரத்திலும் பால் மற்றும் பால்பொருட்களை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

நன்றி.தமிழ்வெளி


21 ஜனவரி, 2011

குவைத்: வெளி நாட்டவருக்கும் 1 மாத சம்பளம் போனஸ் - எம்.பி. வேண்டுகோள் !

குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவைத் தனது 50வது தேசிய தினத்தையும், ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான 20வது சுதந்திர தினத்தையும், தற்போதைய அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாஹ் பதவியேற்ற 5வது ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 11 இலட்சம் குவைத் குடிமக்களுக்கு 1,000 குவைத் தினார் (சுமார் 1.60 இலட்சம் ரூபாய்) வழங்கப்படும் என்றும் வீட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் 14 மாதங்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படும் என்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நோக்குடன் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று வலீத் அல்-தபதபயீ என்ற எம்.பி. அந்நாட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ’குவைத்தின் தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும் அன்பிலும் பொருளுதவி செய்வதிலும் பெயர் போனவர்கள்; அவர்கள் தமது சமூகக் கடமையாகக் கருதி தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும்; இதன் மூலம் வெளிநாட்டினரையும் குவைத்தின் தேசிய தின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுமார் 6 இலட்சம் இந்தியர்கள் குவைத்தில் பணிபுரிந்து வருகின்றனர். குவைத் கொண்டாட்டங்களை முன்னிட்டு போனஸ் கிடைக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.இந்நேரம் .காம்

இஸ்லாமியர்களை வாக்குகளை மனித நேய மக்கள் கட்சி பெறுகிறது.லயோலா கல்லூரி சர்வே. அதிமுக அமோக வெற்றி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFYSYOUJBtsAewsizKBUxQjQHhWqmAExJR1y3oWFkigx3Cw26BX23q9uxwFl6C1h7dJ6TPU_6QzJ7i70uF3XK7Gnq4Vp_4WSARoFI7naMnutgSsEbP45vZM_UTMU39tkf7yYWfMHfAoyQ/s1600/mmk.jpegலயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.

இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.

சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.

இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.


pressmeet-blore

பழைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும் காட்சி ஊடகவியல் தலைவர் டாக்டர்.ராசநாயகம்

இந்த முடிவுகளை நாளை வெளியிடலாம் என்று லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறை முடிவெடுத்திருந்தாலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் நெருக்கடி காரணமாக, நாளை வெளியிடக் கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியை அளித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நவம்பர் மாத கருத்துக் கணிப்பை முடக்கியது போலவே, இந்த முறையும் கருத்துக் கணிப்பு முடிவுகளை முடக்க ஜாபர் சேட்டும், கருணாநிதியும் கடும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், லயோலா கல்லூரி நிர்வாகம் இந்த முறை முடிவுகளை வெளியிடுவது என்ற தீர்மானத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படி அந்த முடிவுகள் வெளியிடப் படாவிட்டாலும், சவுக்கு தனது வாசகர்களுக்காக எப்படியாவது அந்த விபரங்களை எடுத்து வெளியிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மண்ணுக்குள் தலையை புதைத்து கொள்ளும் நெருப்புக் கோழிகளைப் போல, கருணாநிதியும், ஜாபர் சேட்டும், மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் கருணாநிதி முதலமைச்சர் என்பதும், மீண்டும் ஜாபர் சேட் உளவுத் துறை தலைவர் என்பதும், முடவன் ஆசைப் படும் கொம்புத் தேனே, தவிர வேறு ஒன்றும் இல்லை.

நன்றி.சவுக்கு இணையதளம்

செல் ஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?.

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

ஒரு சில குமரிப்பென்கள் தங்களின் பெற்றோர்களையும், மற்றும் குடும்ப பெண்கள் தங்களின் கணவர்களையும் எப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டு, பின் அவர்களின் மானத்திணை இழப்பது மட்டும் இல்லாமல், குடும்பத்தினையே சந்தியில் நிறுத்தும், அவல நிலை இன்றும் தொடர்கின்றது. எனவே வேடிக்கையாக இந்த தகவல்கள் வலைத்தளத்தில் வந்திருந்தாலும், இதில் சில படிப்பினைகளும் நமக்குண்டு!. இதுபோன்று நம் ஆண்/பெண் பிள்ளைகளிடம் செல்போன்களை கொடுத்திருந்தாலும், அவர்களை கண்காணிக்கும் பொறுப்பும் நமக்குண்டு. எனவே படிபினையுடன் இதை படியுங்கள்.

1) TV' யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.
2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.
3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண்,பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்துவாங்குவாள்.
4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Feminaபடிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.
5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்பமுடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...!.
6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா!.)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்கபுரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....!.
8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே, கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள்படும் சிரமம் அது!.
9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என்ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள். எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப்செய்து விடுவீர்களா?
10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம்காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம்ஒரு வித்தியாசம் கூட கண்டு பிடிக்க முடியாது!.

நன்றி.முஜீப்

இஸ்லாமாஃபோபியாவிற்கு பிரிட்டனில் ஆதரவு அதிகரிக்கிறது - பரோணஸ் ஸயீத் வார்ஸி

லண்டன்,ஜன.21:முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வழக்கமாகிவிட்டது எனவும், இதற்கு சமூக ரீதியாக ஆதரவு கிடைப்பதாகவும் டோரி கட்சியின் துணைத் தலைவரும் பிரிட்டன் அமைச்சரவையில் முதல் மூத்த முஸ்லிம் பெண் அமைச்சருமான பரோணஸ் ஸயீத் வார்ஸி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை தீவிரவாதிகள்,மிதவாதிகள் என தரம் பிரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஸயீத் வார்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு ஊடகங்கள் நடத்தும் விவாதங்களை எதிர்க்கொண்டு ஸயீத் வார்ஸி லீஸெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகளை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

20 ஜனவரி, 2011

ஊடகங்களின் பார்வையில் கோவை மாநகராட்சி முற்றுகை

ஆண் குழந்தை வயிற்றில் வளர்ந்த கரு:அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

சென்னை:பிறந்து நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில், கரு வளர்ந்த அதிசயம் சென்னையில் நடந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி விவசாயி காமாட்சி. இவருக்கு கடந்த செப்டம்பரில் ஆண் குழந்தை(வெற்றிவேல்) பிறந்தது. பிறந்ததில் இருந்தே அக்குழந்தையின் வயிற்றுப் பகுதி வீக்கத்துடன் காணப்பட்டது. சிறிது நாட்கள் கழித்து குழந்தைக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டது. தாய்ப்பாலும் சரியாக குடிக்கவில்லை.


குழந்தைக்கு சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம் என கருதி, திருவண்ணாமலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நாளுக்குநாள் குழந்தையின் வயிற்றில் வீக்கம் அதிகரித்தால், மேல் சிகிச்சைக்காக, கடந்த 10ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் வயிற்றில், நீர் கட்டியோ, புற்றுநோயோ இருக்கலாமென கருதிய டாக்டர்கள் அவற்றுக்கான பரிசோதனைகளை செய்தனர். பரிசோதனை முடிவில், குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முத்துகுமார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை அகற்றினர்.


இதுகுறித்து டாக்டர் முத்துகுமார் கூறியதாவது:பொதுவாக தாயின் வயிற்றில் ஒரு கரு தான் வளரும். ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் வளரும்போது, இரட்டை குழந்தை, இரு குழந்தைகள் உடல் ஒட்டிய நிலையில் பிறப்பது போன்றவை நிகழ்கின்றன. அதுபோல, ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் வயிற்றில் மற்றொரு கரு வளரும் அரிய நிகழ்வும் நடக்கும். ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோல நிகழும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற அறுவை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் நடந்துள்ளது.


தற்போது, குழந்தை வெற்றிவேலின் வயிற்றில் வளர்ந்த கருவில், முதுகு தண்டுவடத்தை தவிர, ஒரு வளரும் கருவில் காணப்படும் தலைமுடி, கைவிரல்கள் ஆகியவை காணப்பட்டன. 14 செ.மீ., அகலமும், 12 செ.மீ., நீளமும் கொண்ட அக்கருவை அறுவை சிகிச்சை செய்து எடுத்தோம். முறையான பரிசோதனைக்காக அதை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை வெற்றிவேல் நலமாக உள்ளான்.இவ்வாறு டாக்டர் முத்துகுமார் கூறினார்.


நன்றி.தினமலர்

19 ஜனவரி, 2011

டெல்லியில் பள்ளிவாசல் இடிப்பு! த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
டெல்லி நிஜாமுதீனில் ஜங்புரா பகுதியில் கடந்த புதன்கிழமை (12.01.2011) மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசல் ஒன்று பட்டப்பகலில் இடிக்கப்பட்டதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இடிக்கப்பட்ட பள்ளிவாசல், வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது மட்டுமின்றி அதுகுறித்து அரசு அறிவிக்கையில் (கெஜட்டில்) வெளியிடப்பட்டிருக்கிறது.


தகுந்த காரணங்கள் இன்றி ஒரு பிழையான நீதிமன்ற உத்தரவைக் காரணமாக வைத்து காங்கிரஸ் தலைமையிலான டெல்லி நிர்வாகம் இக்கொடூரக் குற்றத்தை பட்டப்பகலில் நடத்தியுள்ளது. இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக தொழுகை நடத்தி வந்துள்ளனர்.


சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் 1992ல் பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தடுக்க முடியாத காங்கிரஸ் அரசு தற்போது தலைநகர் டெல்லியிலேயே பள்ளிவாசலை இடிக்க வழிவகுத்துள்ளது.


பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்தில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக தொழுகை நடத்துவதற்கு டெல்லி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும், பள்ளிவாசலை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதோடு உரிய இழப்பீட்டை டெல்லி மாநில அரசு அளிக்க வேண்டும், மேலும் பள்ளிவாசலை இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகிறது.


இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்று எச்சரிக்கிறது.

இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இடம் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்பது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான ஆவணங்கள்

நன்றி.தமுமுக.காம்

வெற்றியாளர்கள் யார்?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130

எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். 3:185

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200

எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும். 4:13

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் விலகிக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். 5:90

அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” 6:16

அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8

எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். 22:77

உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38

எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61

எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும். 45:30

(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 64:16

நன்றி- ரீட் இஸ்லாம்.நெட்

நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை-சீமான் திடீர் விளக்கம்

Seeman தமிழ் இனத்தை அழித்தவர்களுக்கு துணை போனவர் கருணாநிதி. எனவே அவரது ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று தான் சொன்னேன். ஆனால் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக நான் கூறவே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஈழத்தில் உள்ள தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி. எனவே அவர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் நான் சொன்னேன்.

அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே?

கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறார். நீங்கள் இரண்டு பேரும் ஊழல் செய்தவர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

ஜெயலலிதா, கருணாநிதியை விட்டால் நாட்டைக் காக்க வேறு ஆளே இல்லையா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அழிக்க வேண்டும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், எவ்வளவு சீட் வாங்கினாலும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணியையும் தோற்கடிப்போம் என்றார்.

நன்றி. தட்ஸ் தமிழ்

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

இஸ்லாமாபாத்,ஜன.19-
பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணியளவில் தல்பாந்தின் நகரிலும்,அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அப்போது நள்ளிரவை கடந்து அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைகளில் இருந்து அவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதனால், பயந்த மக்கள் திடுக்கிட்டு விழித்து எழுந்தனர். நிலநடுக்கம் என்பதை உணர்ந்த அவர்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் கூடினார்கள்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பீதியில் உறைந்த மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது விடிய விடிய ரோட்டில் தங்கி இருந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஈரான் நகரை மையமாக வைத்து இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர்சேதம் போன்றவை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே இந்த நில நிடுக்கம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் மாகாணங்களில் உணரப்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. இங்கு அதிகாலை 4.43 மணிய ளவில் பூமி அதிர்ந்து குலுங்கியது. இதனால் சேதங்கள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட வில்லை. இங்கு 4.3 ரிக்டல் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெல்லியை தவிர அதை சுற்றியுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டா, அரியானாவில் உள்ள ருர்கான் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. வளைகுடா நாடுகளான அபுதாபி, துபாய் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. அங்கும் பூமி லேசாக அதிர்ந்தது.

நன்றி.மாலைமலர்

தி.மு.க.,வுடன் கூட்டணி: இந்திய முஸ்லிம் லீக் முடிவு

வேலூர் : வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் நிருபர்களிடம்

கூறியதாவது:கட்டமாய திருமண பதிவு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில் தரும் திருமணம் பதிவு சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.., தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும், என்றார்

18 ஜனவரி, 2011

ஈரானில் ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் தண்டனை ரத்து அதற்கு பதிலாக தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு



 
 
ஈரானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் சகினே முகமது அஷ்தியானியை கல்லால் அடித்துக்கொல்லும்படி கோர்ட்டு தண்டனை விதித்தது. இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.
 
இதைத்தொடர்ந்து ஈரானின் நட்பு நாடான பிரேசில் அதிபர் டில்மா ரவுசப் பாராளுமன்ற மனித உரிமைக்குழு தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் சகினேவை விடுதலை செய்து பிரேசில் நாட்டுக்கு அனுப்புங்கள். அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளிக்கிறோம் என்று கூறி இருந்தார்.
 
இதற்கு பதில் அளித்து மனித உரிமைக்குழு தலைவர் சோக்ரே இலாகியான் எழுதிய பதிலில் சகினேயை கல்லால் அடித்து கொல்லும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக அவரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரை மன்னித்து விடுதலை செய்யும்படி அவரது குழந்தைகள் கேட்டுக்கொண்டு இருப்பதால் அந்த தண்டனையும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். 
 
 
நன்றி.மாலைமலர்
 

மொபைல் நம்பரை இனி மாற்ற வேண்டாம்: புதிய வசதி நாடு முழுவதும் நாளை அறிமுகம்


 
புதுடில்லி : மொபைல் போன் வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நாளை முதல் நிறைவேறுகிறது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தங்களின் எண்களை மாற்றாமலே, மொபைல் போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது மொபைல் போன் சேவை அளித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தங்களுக்கென பிரத்யேகமாக துவங்கும் எண்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள், தற்போது பயன்படுத்தி வரும் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு பதிலாக, வேறொரு புதிய நிறுவனத்துக்கு மாற விரும்பினால், அவர் பயன்படுத்தி வரும் எண்ணையும் மாற்ற வேண்டி வரும். இதனால், வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க, "மொபைல் நம்பர் போர்டபிலிட்டி' (எம்.என்.பி.,) என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய தொலைத் தொடர்பு கமிஷன் (டிராய்) திட்டமிட்டது.

இதன்படி வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களை தேர்வு செய்யலாம். அதற்காக எண்களை மாற்றிக் கொள்ள தேவையில்லை. தொடர்ந்து அதே எண்ணை பயன்படுத்தலாம். கடந்தாண்டே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், தங்களின் நெட்ஒர்க்கை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தியதாலும், கட்டமைப்பு பணிகளுக்காகவும், திட்டத்தை செயல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டது. இத்திட்டம், முதல்கட்டமாக, அரியானா மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

தற்போது, இத்திட்டம் நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருவதாக, "டிராய்' நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை மாற்றாமல், தங்களுக்கு சேவை அளித்து வரும் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் சேவை வழங்குவதில் உண்மையான போட்டி உருவாகும் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொபைல் போன் சேவை நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க தரமான சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி.தினமலர் 

10 ஆண்டுகளில் விவசாயத்தை கை கழுவியவர்கள் 70 லட்சம் பேர்


விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.

இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, "விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

"கடன் தள்ளுபடி' திட்டம் கண்துடைப்பு : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும்.

நன்றி.தினமலர்

17 ஜனவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியில் 16 1/2 லட்சம் வாக்காளர்கள் கலெக்டர் அறிவிப்பு

 
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2011-ம் ஆண்டிற்கான சுருக்குமுறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 10-01-2011-ல் வெளியிடப் பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 01-01-2011 தேதியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25-10-2010 முதல் 13-11-2010 வரை 56534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தற்பொழுது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி - திட்டக்குடி (தனி), ஆண்-87542, பெண்-86065,
மொத்தம் - 173607 தொகுதி - விருத்தாசலம், ஆண்-98630, பெண்-94490, மொத்தம் - 193120 தொகுதி - நெய்வேலி, ஆண்-83277, பெண்-78530, மொத்தம் - 161807 தொகுதி - பண்ருட்டி, ஆண்-95037, பெண்-94331, மொத்தம் - 189368 தொகுதி - கடலூர், ஆண்-88650, பெண்-88716, மொத்தம் - 177366 தொகுதி - குறிஞ்சிப்பாடி, ஆண்-91543, பெண்-86807, மொத்தம் - 178350 தொகுதி - புவனகிரி, ஆண்-104753, பெண்-100511, மொத்தம் - 205264 தொகுதி - சிதம்பரம், ஆண்-94192, பெண்-92427, மொத்தம் - 186619 தொகுதி -
காட்டுமன்னார்கோயில் (தனி), ஆண்-93009, பெண்-86624, மொத்தம் - 179633 மொத்தம் ஆண்-836633, பெண்-808501, மொத்தம் - 1645134 மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப் பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். 
நன்றி.மாலைமலர்

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?


லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் "பிரன்ட் லைன்' கிளப்பில், அதன் உரிமையாளரும், "விக்கிலீக்ஸ்' பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.

நன்றி.தினமலர் 

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!

சுவாமி அசீமானந்தா

சுவாமி அசீமானந்தா

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட

அப்துல் கலீம்

நிரபராதி அப்துல் கலீம்

ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்

மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப் பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்

இந்திரேஷ் குமார்

இந்திரேஷ் குமார்

இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.

2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை

சுனில் ஜோஷி

சுனில் ஜோஷி

அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.

சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக

தயாநந்த் பாண்டே

தயாநந்த் பாண்டே

ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.

இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.

இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்

சந்தீர்ப டாங்கே

சந்தீர்ப டாங்கே

அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.

அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.

அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.

இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை

ராம்ஜி

ராம்ஜி

பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது. ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.

ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில்

புரோஹித்

புரோஹித்

வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.

தேவேந்திர குப்தா

தேவேந்திர குப்தா

இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் - பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.

அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம்,

லோகேஷ் சர்மா

லோகேஷ் சர்மா

ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.

ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.

இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.


நன்றி.வினவு.காம்