#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 டிசம்பர், 2010

பெரியப்பட்டணம் படகு விபத்து - பாதிக்கப்பட்டோருக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற படகு விபத்தில் மரணமடைந்தோர் வீட்டிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


பெரியப்பட்டணத்தில் இருந்து இரண்டு படகுகளில் அப்பா தீவிற்கு சுற்றுலா சென்றப் போது ஒரு படகு கவிழ்ந்து 15 பேர் மரணமடைந்தார்கள். இப்படகு விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் தமுமுகவினர் மீட்பு பணியில் இறங்கினார்கள். இவ்விபத்தில் மரணமைடைந்தோரின் குடுமப்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடந்த செவ்வாய் (டிசம்பர் 28) அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைப் புரிந்தார். முதலில் பரமக்குடிக்குச் சென்ற தமுமுக தலைவர் அங்கு ரயில்வே இப்றாஹீம் மகன் இப்னு வீட்டிற்குச் சென்றார். இப்னுவின் மனைவி பரிதா மற்றும் மகள் நாதிரா ஆகியோர் இவ்விபத்தில் மரணமடைந்தார்கள். பிறகு முத்து முஹம்மது இல்லத்திற்குச் சென்றார். இவரது சகோதரி சல்மா இந்த விபத்தில் மரணமடைந்தார். இவர்களுககு ஆறுதல் கூறிய பிறகு பெரியப்பட்டணம் சென்ற தமுமுக தலைவர் அங்கு மவ்லவி குத்தூஸ் ஆலிம் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்த அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு பெரியப்பட்டணம் ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளியில் ஜமாஅத்தார்கள் அனைவரையும் சந்தித்து படகு விபத்து பற்றிய விபரங்களை கேட்டறிந்தார். இந்த பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஷாகுல் அமீது தலைமையில் மக்கள் விபத்து நடைபெற்ற தினத்தில் தமுமுக செய்த மீடபு பணிகளுக்காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிறகு மஸ்ஜித் அல் பலாஹ் பள்ளிவாசலிலும் ஜமாஅததார்க்ள அதன் தலைவர் சீனத தலைமையில் விபத்து பற்றிய தங்கள் கருத்துகளை பதிவுச் செய்தனர். இவர்களும் தமுமுக செய்த மீட்பு பணிகளை பாராட்டினர்.



பெரியப்பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் ரஹீம், சங்கு குளிப்போர் சங்கத்தினர் உட்பட பல தரப்பினரும் தமுமுக தலைவரை சந்தித்து படகு விபத்து பற்றிய தங்கள் கருத்துகளை பதிவுச் செய்தனர்.

இந்த படகு விபத்தில் சிக்கிக் கொண்டோரின் நெஞ்சை உருகும் பதிவுகள் இச்சந்திப்பின் போது தமுமுக தலைவரிடம் பதிவுச் செய்யபட்டன. அக்பர் அலி அவர்களின் மனைவி தனது நான்கு குழந்தைகளை காப்பாற்றி விட்டு கடைசியில் அவர் மட்டும் உயிர் இழந்த தியாகம் நெஞ்சை பிளந்தது.


தமுமுக தலைவரிடம் கருத்துகளை பதிவுச் செய்த பெரியப்பட்டண வாசிகள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டித்தனர். பெரியப் பட்டணத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் அனைவரும் முதலில் இறந்தவர்களின் சடலங்கள் எங்கே என்று மட்டுமே கேட்டனர் என்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் இருக்கின்றார்களா என்றெல்லாம் விசாரிக்கவில்லை என்றும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்றெல்லாம் வந்தார்கள் ஆனால் ஒரு மருத்துவர் கூட வரவில்லை என்றும் அவர்கள் கோபத்துடன் கூறினார்கள். பெரியபட்டணத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்த போதினும் அங்குள்ள மருத்துவர் கூட விபத்தின் போது உதவிக்கு வரவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். சாதாரண நேரத்தில் கூட மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதில்லை என்று புகார் கூறினார்கள்.



பெரியப்பட்டணத்தில் ஆழ்கடலுக்குச் சென்று சங்கு குளிக்கும் கை தேர்ந்த மீனவர்கள் உள்ளனர். இவர்கள் விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன் தன்னார்வமாக சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். இதே போல் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர். ஆனால் விபத்து நடைபெற்று பல மணிநேரம் சென்று அங்கு வந்த கடலோர காவல்படையினர் விபத்தில் சிக்கியோருக்கு எவ்விதத்திலும் உதவி செய்யாமல் மீனவர்கள் மீட்ட உடல் ஒன்றை வலுக்கட்டாயமாக பெற்று தாங்கள் மீட்டது போல் ஊடகங்களுக்கு காட்சி தந்தனர் என்று மீனவர்கள் குமுறினர். சில செய்தி ஊடகங்களும் மீனவர்கள் மற்றும் தமுமுகவினர் செய்த மீட்பு பணிகளை இருட்டடிப்பு செய்து விட்டு கடலோர காவல் படைக்கு செய்யாத சேவைக்கு பாராட்டுதல்களை அளித்ததாக பெரியபட்டணம் மீனவர்கள் கோபத்துடன் தமுமுக தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.


தாங்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்த பலருக்கு மருத்துவர்கள் கரையில் உரிய மருத்து முதலுதவி சிகிச்சை அழுத்தியிருந்தால் பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றும் அனைவரும் தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக இறந்து விட்டார் என்று கருதப்பட்ட ஒரு பெண்மணிக்கு ஆடை மாற்றும் போது வீங்கியிருந்த அவரது வயிறை அழுத்திய போது அவருக்கு மூச்சு திரும்பியதை எடுத்துச் சொன்னார்கள்.

செய்தியாளர் சந்திப்பு

ராமநாதபுரம் வந்த தமுமுக தலைவர் ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பங்குக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”சுனாமி எனும் ஆழி பேரலை தமிழகத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய அதே தினத்தில் பெரியப்பட்டணம் படகு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழக அரசு சுனாமியில் இருந்து படிப்பினை பெற்றது போல் தெரியவில்லை. பேரிடர்களை சமாளிக்க அரசு பல கோடி செலவுச் செய்த போதினும் பெரியப்பட்டணம் படகு விபத்தின் போது உடனடியாக மாவட்ட நிர்வாக உரிய பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய மீட்பு குழுவை அனுப்ப முடியவில்லை. தகுந்த மருத்துவர்களால் உடனடியான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க இயலும். பெரியப்பட்டணம் விபத்தில இறந்தோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலனவர்கள் ஏழைகள். தமிழக அரசு இவரக்ளுக்கு அளித்துள்ள ரூ ஒரு இலட்சம் இழப்பீடு போதுமானதாக இல்லை. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு பேரூந்து விபத்தில் இறந்த சுரேஷ் என்ற மாணவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 5 இலட்சம் இழப்பீடு வழங்கினார். ஆனால் பெரியப்பட்டணத்தில் நிர்வாகச் சீர்கேட்டினால் ஏற்பட்ட இந்த விபத்து மற்றும் இறப்பிற்கு பொறுப்பேற்று ரூ5 இலட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசை கோருகின்றோம்.கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் எழை எளிய மக்களுக்கு சேவை செய்வதாக தமிழக அரசு கூறி வருகின்றது. ஆனால் பெரியப்பட்ணம் போல் பல கிரமாங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலைத் தான் உள்ளது. இதன் மூலம் மக்கள் மருததுவ சேவை பெறுவது அரிதாவே கிடைக்கின்றது. இந்த சீர்கேட்டை சரிசெய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தகுந்த மீட்பு மற்றும் மருத்துவ சேவைகளை ஏற்பாடு செய்யாத இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணிமாற்றம் செய்யப்பட வேண்டும் ” என்று தெரிவித்தார்.



தமுமுக தலைவரின் இப்பயணத்தின் போது ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், தமுமுக மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா மமக மாவட்டச் செயலாளர் அன்வர், சவுதி தம்மாம் மண்டல தமுமுக நிர்வாகி மவ்லவி அலாவுதீன் பாகவி, உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் பங்குக் கொண்டார்கள்.

நன்றி.தமுமுக

29 டிசம்பர், 2010

இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து


வாஷிங்டன் : "குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.


அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.


"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

28 டிசம்பர், 2010

படகு விபத்துக்கு நிவாரணம் போதாது: ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி


ராமநாதபுரம் : ""பெரியபட்டினம் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது,'' என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.


ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பெரியபட்டினம் விபத்துக்கு மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பாகும். மீனவர்கள் தான் அனைவரையும் மீட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசு இயந்திரம் செயல் இழந்துவிட்டது. இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது போதாது. தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை திருப்தியளிப்பதாக உள்ளது. குற்றசாட்டுகள் வரும் போது அதில் பாரபட்சம் தேவையில்லை. தேவைபட்டால் கருணாநிதியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தலாம். அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு சாதகமாக கருதப்படும் தொகுதிகளை கேட்போம், என்றார்.

நன்றி.தினமலர்

விண்ணேறும் விலைவாசி: அதல பாதாளத்தில் மக்கள்!

விலைவாசி உயர்வு இந்த நாட்டை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை, தாங்கும் சக்தியை கேள்விக்குரியதாக்கி கேலிக்குரியதாக்கி வாழ்க்கைத் தரத்தை படு பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் இன்று மக்கள் அல்லாடும் நிலை தொடர்கிறது.

காய்கறி விலையேற்றம் விண்ணை முட்டுகிறது. வெங்காயம் தக்காளி போன்றவற்றின் விண்ணேறிய விலையேற்றத்தினால் மக்கள் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியரின் சம்பள உயர்வு அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் வீட்டுவாடகை உயர்வதைப்போல பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, லாரி அதிபர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர்.

வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடைவிதித்தவுடன் அதே வியாபாரிகள் இப்போது வெங்காயத்தை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டார்கள். முதல்கட்டமாக 13 டிரக்குகளில் சுமார் 1,000 டன்னுக்கும் அதிகமான வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு - குறிப்பாக தில்லிக்கு - வந்து சேர்ந்தது. சுங்கவரி உள்பட இந்த வெங்காயத்தின் அடக்கவிலை கிலோ ரூ.18 மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

ஆகவே, மீண்டும் கிலோ ரூ.30க்கு தில்லி காய்கறிச் சந்தையில் வெங்காயம் கிடைப்பது திண்ணம். நம்முடைய கேள்வி இதுதான். - பாகிஸ்தானில் இவ்வளவு மலிவான விலையில் வெங்காயம் கிடைக்கும் என்றால், அதை ஏன் முன்னதாகவே இறக்குமதி செய்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயராமல் இருக்கும்படி அரசு செய்திருக்கக் கூடாது? மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் என்றால் இதைத்தானே அரசு செய்திருக்க வேண்டும்.

இதையும் வியாபாரிகள் தான் தங்கள் லாபத்துக்காகச் செய்ய வேண்டுமா? அரசு ஏன் இதில் முனைப்புக் காட்டியிருக்கக் கூடாது? வெங்காயத்தில் இப்படியான நிலைப்பாடு என்றால், சர்க்கரையில் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அல்லவா இந்திய அரசு எடுக்கிறதுமுக்கிய காலங்களில் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்காதீர்கள்.

உள்நாட்டில் சர்க்கரை விலை உயரும் என்று எல்லோரும் சொல்லியாகிவிட்டது. ஆனால், செப்டம்பரில் 2.5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேட்டால், இந்தியாவில் நடப்பாண்டு 25 மில்லியன் டன் உற்பத்தி சர்க்கரை கிடைக்கும். மேலும் கடந்த ஆண்டு இருப்பு 50 லட்சம் டன். ஆகையால் இந்த ஏற்றுமதியால் விலை உயராது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.

ஆனாலும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.35 வரை உயர்ந்தது.இப்போதும்கூட 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் என்ன என்பதை அறியாமல் நாட்டின் நிர்வாகத்தை நகர்த்தும் அதி புத்திசாலிகளை என்ன வென்று சொல்வது ?

ஒரு ரூபாய் அரிசியை வைத்து இருபத்தி ஐந்து ரூபாய் தண்ணீர் இல்லாமல்சமைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதில் காயாவது கறியாவது வாழ்வாவது ஒன்றாவது என அப்பாவி மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். ஆளும் அரசுகளோ கோடிகளைக் குவிப்பதிலே மூழ்கியுள்ளன. மக்களின் கண்ணீர் மட்டுமே இங்கு மலிவு விலைப் பொருளாக மாறிவிட்டது.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொத்தது என்பதை இவர்கள் புரியாவிட்டால் மக்களின் ஆத்திர அலைகளே இவர்களை தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி.தமுமுக.காம்

பெரியபட்டினம் படகு விபத்து: உயிரிழந்தோருக்கு 5 லட்சம் இழப்பீடு தருக தமுமுக வலியுறுத்தல்

பெரியபட்டினம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தருமாறு தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

பெரியபட்டினம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தருமாறு தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

"ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் டிசம்பர் 26 அன்று நடந்த படகு விபத்தில் 15 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி எங்கள் வேதனையை அதிகப்படுத்துகிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துப் பற்றிய செய்தி அறிந்தவுடன் தமுமுகவின் ஆறு ஆம்புலென்சுகளுடன் அங்கு சென்று நிவாரணப் பணிகளை இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட தமுமுக செய்துள்ளது.

அப்பகுதி பவளப்பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், கடலோர காவல் படையின் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது. இச்சூழலில், அனுமதியின்றி அருகில் உள்ள அப்பா தீவுக்குச் சுற்றுலா செல்ல மக்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்விக்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பலர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், போதிய முதலுதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு விபத்து பற்றிய செய்தி உடனடியாக தெரிவிக்கப்பட்ட போதினும் அரசின் மருத்துவ மற்றும் மீட்புக் குழு தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. உரிய நேரத்தில் மருத்துவக் குழு அங்கு வந்து முதலுதவி செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

தமிழக அரசு, இந்த விபத்தில் உயிர் இழந்த 15 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு ரூ.1 இலட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி.தமுமுக.காம்

26 டிசம்பர், 2010

"அல்-உம்மா' பாஷாவுக்கு 10 நாள் பரோல்


கோவை : மனைவியின் உடல் நலத்தை கவனிப்பதற்காக, "அல்-உம்மா' தலைவர் பாஷாவுக்கு, பாதுகாப்புடன் கூடிய 10 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பாஷா; அல்-உம்மா நிறுவனத் தலைவரான இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உக்கடம், பிலால் நகரில் வசிக்கும் இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பக்கத்தில் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள, ஒரு மாதம் பரோல் அனுமதி கேட்டு தமிழக அரசின் உள்துறைக்கு மனு அனுப்பினார். இம்மனுவை பரிசீலித்த உள்துறை, 10 நாள் பரோல் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு கோவை சிறையில் இருந்த பாஷாவை, பிலால் நகரில் உள்ள வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இரவு நேரங்களில் சிறைக்கு வராமல் தொடர்ந்து 10 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால், பாஷாவுக்கு பாதுகாப்பு அளிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள், நான்கு எஸ்.ஐ.,க்கள் மற்றும் 11 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, கண்காணிப்பு பணியில் கோவை மாநகரில் செயல்படும் பல்வேறு உளவுப்பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர். 10 நாள் பரோல் முடிந்து ஜன., 5ல் மீண்டும் பாஷா சிறையில் அடைக்கப்படுகிறார்.

நன்றி.தினமலர்

விடுமுறையை கழிக்க தீவுக்கு சென்றவர்கள் 20 பேர் பலி: ராமநாதபுரம் அருகே சுனாமி நினைவுநாளில் சோகம்


ராமநாதபுரம் : விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.


ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்7றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐயூபு கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லித்தீவிற்கு கிளம்பினர்.ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூபு கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ., தூரத்தில் நிலைதடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூபு கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.


அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இபுனு மகள் நாதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரகத்(37), ஹமீதா நிஷா(38), பெரியபட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி பிரிதவ் பானு(40), சீனி ஊர்து மனைவி பர்சானா(35), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மகுபு(16), சதகத்துல்லா மனைவி அலிமுத்து(45), சாகுல் ஹமீது மகள் முஸ்பிலிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), சீனி முகமது மகன் அப்துல் வஹாப்(12) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நஜியா(18), ரஹிமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.


விபத்து நடந்தது எப்படி?பெரியபட்டினம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. முல்லித்தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும்.விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும், லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்தது.


ஜி.பி.எஸ்., கருவி கொடுத்த "க்ளூ' : சம்பவத்திற்கு படகில் சென்ற டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோருக்கு படகின் இரண்டு பலகைகள் மட்டுமே தென்பட்டது. சம்பவ இடத்தை அறிய, மீட்புக் குழுவினர் பொருத்திய மிதவைகள் உதவின. படகின் ஜி.பி.எஸ்., கருவி மூலம் படகு ஆழப்பகுதியில் சென்று மூழ்கியது தெரிய வந்தது.கடலில் மூழ்கிய படகை கடலோர காவல் படை கப்பல் மூலம் கயிறு கட்டி இழுத்த போது, படகு கடலுக்குள்ளேயே உடைந்து சேதமடைந்தது. படகை மீட்கும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடற்படையின் ஹெலிகாப்டர், கடலோர காவல் படையின் வலை தேடல் போன்றவற்றை பார்வையிட்ட அதிகாரிகள், சிறிது நேரத்திற்கு பின் கரை திரும்பினர்.
தே.மு.தி.க., - காங்., மோதல் : சம்பவம் நடந்த தகவல் தெரிந்து அரசியல் கட்சியினர் குவியத் துவங்கினர். அமைச்சர் தங்கவேலன், காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் வந்தனர். "பிரேத பரிசோதனை குழுவினரை சம்பவ இடத்திற்கு வருமாறு' எம்.எல்.ஏ.,விடம் தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா கூறினார்.இதில் மோதல் உருவாக, இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 15 நிமிடம் தொடர்ந்த இந்த மோதலை, அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து, இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.


அதிகாரிகளை புலம்ப வைத்த மக்கள் : அதிகாரிகள் வருவதற்கு முன்னரே உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றை கைப்பற்றிய உறவினர்கள் வீடுகளில் வைத்து பூட்டினர். அதன் பின் வந்த கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியும், பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு' சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களிடம் வலியுறுத்தி சென்றனர்.


அதிகாரிகள் பதில் என்ன? கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்' என்றார்.


எஸ்.பி., பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்' என்றார்.


விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்' என்றான்.


நன்றி.தினமலர்

25 டிசம்பர், 2010

அஜ்மீர் குண்டு வெடிப்பு : வழக்கில் புதிய திருப்பம்




ஜெய்ப்பூர் : அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு தேவையான குண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்திய காரை, ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இது தொடர்பாக ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படை கூடுதல் எஸ்.பி., சத்தியேந்திர சிங் கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா அருகே, குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அஜ்மீரைச் சேர்ந்த தேவேந்திர குப்தா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் லாவே மற்றும் லோகேஷ் சர்மா, ஹர்ஷத்பாய் சோலங்கி, முகேஷ் வாசனி என்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சோலங்கிக்கு, 2004ம் ஆண்டு வதோதராவில் நிகழ்ந்த பெஸ்ட் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உண்டு. இந்நிலையில், அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு தேவையான குண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சான்ட்ரோ காரை பறிமுதல் செய்துள்ளோம். இந்தூரில் இருந்து அதை கொண்டு வந்துள்ளோம். இந்த காரை சுனில் ஜோஷி என்பவன் பயன்படுத்தியுள்ளான். அவன், இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே இறந்து விட்டான். அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் ஒரு ஆதாரமாக இந்த கார் இருக்கும். இவ்வாறு சத்தியேந்திர சிங் கூறினார்.

இதுபோல் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கு பயங்கரவாத செயலில் இடுப்படும் காவி பயங்கரவாத கும்பலை கண்டுயறிந்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா அமைதி பூங்காவாக மலரும் .


வங்கிகளின் ராங்கித்தனம்!

வங்கிகள் அதிக எண்ணிக்கையில் பெருகி, ஒவ்வொரு வங்கியும் அதிகக் கிளைகளைத் தொடங்கி பெரும் தொழில்போட்டிகள் நடைபெறும் இந்த நாளில், வங்கிகளுக்கு மாணவர்களைக் கண்டால் ஒருவிதமான வெறுப்பு ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. கல்விக் கடன் தருவது என்றாலும் சரி, சாதாரணமாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குவது என்றாலும் சரி, மாணவர்களை வங்கிகள் நடத்தும் விதத்தைப் பார்த்தால் வருத்தம் தருவதாகவே இருக்கிறது.



பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தந்தத் துறை வாயிலாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை இந்தக் கல்வி உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளிலேயே பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால், இத்தகைய விநியோக முறையில், பணம் பட்டுவாடா செய்யும் அதிகாரி ஒவ்வொரு மாணவரிடமும் குறிப்பிட்ட

தொகையை முறைகேடாகப் பிடித்தம் செய்துகொண்டு, மீதிப்பணத்தைத் தருவதும், முழுத் தொகைக்குக் கையெழுத்துப் போடும்படி மாணவர்களை நிர்பந்திப்பதுமான ஊழல் நடந்து கொண்டிருந்தது. மிகச் சிறிய தொகை பிடித்தம் செய்தபோது மாணவர்கள் இதை அவர்களுக்கான சேவைக் கட்டணமாகப் பொறுத்துக்கொண்டனர். ஆனால், ஓரளவுக்கு மேலாகச் சென்றபோது எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இத்தகைய புகார்கள் அதிகமாக வரத் தொடங்கின.

சில தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் இந்தத் தொகைக்கான கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு, படிப்பை முடித்துச் செல்லும்போது வாங்கிக்கொள் என்பதும், படிப்பை முடித்து இடமாற்றுச் சான்று பெறும் வேளையில், கல்விஅறக்கட்டளைக்கு உன்னால் இயன்ற நிதி கொடு என்று அன்புக் கட்டளையிடுவதாகவும்கூட புகார்கள் வந்தன. பிறகுதான், அரசுக்கு விழிப்பு வந்தது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை காசோலையாக அளிக்கும் நடைமுறையை அரசு அறிமுகம் செய்தது. இதிலும்கூட சில ஆள்மாறாட்டங்கள் நடைபெறத் தொடங்கியதால், அந்தக் காசோலையை "அக்கவுன்ட் பேயி ஒன்லி' என்று குறுக்குக்கோடு போட்டுத் தரும் நடைமுறை

ஏற்பட்டுள்ளது. இந்தக் காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்தி, பிறகுதான் பணத்தைப் பெற முடியும். மிக நல்ல நடைமுறையை அரசு அறிமுகம் செய்திருக்கும் இந்த

வேளையில், மாணவர்களுக்குச் சேமிப்புக் கணக்குத் தொடங்குவதில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வற்புறுத்தும் வங்கிகள், வரும் மாணவர்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை. "உன் இருப்பிட முகவரி எது? நீ அந்தக் கிளைக்குப் போ, இங்கே வராதே' என்று விரட்டுகின்றன.

சேமிப்புக் கணக்குத் தொடங்குவதற்கான படிவங்கள் வழங்கக்கூட மறுக்கின்றன. "கோர் பேங்கிங்' என்ற நடைமுறையே எங்கிருந்தும் ஒரு கணக்கை இயக்கலாம் என்கிற அடிப்படையில் உருவானதுதான். ஒரு வாடிக்கையாளரின் முகவரி எங்கே இருந்தால் என்ன? இதில் பாதிக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து வருபவர்கள்தான். குறைந்தபட்சம் ரூ. 500 டெபாசிட் செய்ய வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை. இந்தக் கல்வி உதவித் தொகை பெறும்

மாணவர்களில் 90 சதவீதம் பேர் நிச்சயமாக ஏழைகள். இவர்களுக்குக் கிடைக்கப்போகும் கல்வி உதவித் தொகையே சராசரியாக ரூ. 1,000 தான். தொடர்ந்து அந்தக் கணக்கை உயிர்ப்பித்துக்கொண்டிருக்க இவர்கள் வியாபாரிகளோ, சம்பளக்காரர்களோ அல்ல.

ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளராகச் சேர்க்க விரும்பும் வங்கிகள், அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் தங்கள் வங்கி மூலமாக வழங்க, "ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்' வசதியை அளிக்க முன்வருகின்றன. ஏனென்றால், அந்த நிறுவனத்தின் மற்ற கணக்குப் பரிமாற்றங்களால் வங்கிக்கு ஆதாயம் உண்டு. பள்ளி மாணவர்களிடம் எத்தகைய ஆதாயத்தைப் பெற முடியும்? இந்த மாணவர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துவார்கள் என்பதால், இவர்களுக்கான தனி சேமிப்புக் கணக்கை உருவாக்குவது ஒரு பணிச்சுமை என்றே வங்கிகள் கருதுகின்றன.

இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பள்ளியின் மாணவர்கள் அனைவருக்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கை உருவாக்கித் தரும் சேவையைக் கல்வித் துறை அல்லது அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரே செய்துதர வேண்டும் என்கிற நடைமுறையை உருவாக்கினால்கூட போதுமானது. இத்தகைய நடைமுறை, இருப்பிடச் சான்று, குறைந்தபட்ச டெபாசிட் ஆகிய நிபந்தனைகளைத் தளர்த்த உதவும். மாணவர்களிடம் சேமிப்பு வழக்கத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும்.

கல்விக் கடன் வழங்குவதிலும் இப்படித்தான் மாணவர்கள் அவமானப்படுகிறார்கள். அவரவர் முகவரி எங்கே இருக்கிறதோ, அந்த முகவரிக்கு அருகில் உள்ள, மாவட்ட ஆட்சியர் பட்டியலிடுகிற வங்கியில்தான் அந்த மாணவர் கல்விக் கடன் பெறவேண்டும் என்கிற நிபந்தனை அர்த்தமற்றது. கல்விக்கான வங்கிக் கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தேவையற்ற நிபந்தனைகளும் சிக்கல்களும் இந்த வட்டித் தள்ளுபடியைக்கூட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தடுக்கின்றன. வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டுமானால், ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவு என்கிற சான்றிதழை அந்தந்தப் பகுதியில் உள்ள வருவாய்த்துறை வட்டாட்சியர்களிடம் பெற்றுத் தர, ஒரு படிவத்தை அந்தந்த வங்கித் தலைமை அலுவலகங்கள் உருவாக்கியுள்ளன. இதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு இல்லையா? அந்த மாணவர்களுக்கு அஞ்சலில் ஒரு கடிதத்துடன், படிவத்தையும் இணைத்து அனுப்பி, இதைப் பூர்த்தி செய்து சலுகையைப் பெறுங்கள் என்று சொல்ல வேண்டியது வங்கியின் கடமை இல்லையா? அல்லது ஒரு மாணவன் மீதான கனிவாகக்கூட இதைச் செய்யலாமே!

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணங்களை வரைவோலையாகக் கேட்கும்போது, இவர்களிடமும் அதே கமிஷன் தொகை வசூலிக்கிறார்களே! படிக்கும் மாணவர்களுக்காக இத்தகைய வரைவோலைக்குக் கமிஷனைப் பாதியாகக் குறைத்தால்கூட மாணவர்களுக்கு ஒரு பத்து ரூபாய் மிச்சமாகுமே!

தொழிலதிபர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக மட்டும்தானா வங்கிகள்? பொதுமக்களின் சேமிப்பில்தானே இந்த வங்கிகளின் லாபமே இருக்கிறது என்கிற உண்மையை வங்கி மேலாளர்கள் தொடங்கி ரிசர்வ் வங்கி வரையில் உணர மறுப்பது ஏன்? காசுள்ள இடத்தில் கருணை இல்லை. என்ன செய்ய?

-நன்றி தினமணி தலையங்கம்

24 டிசம்பர், 2010

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பூரண மதுவிலக்கு கோரி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம்



ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பூரண மதுவிலக்கு கோரி பிரசாரம் செய்கின்றனர்.
கோவை மாநகர ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் சிக்கந்தர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிட பன்மடங்கு பெருகியுள்ளது. பள்ளிக்கூட மாணவர்களிடமும் மதுப்பழக்கம் அதிகரித்து விட்டது. 2003ல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்த போது ஆண்டின் விற்பனை 3500 கோடியாக இருந்தது. இப்போது 14 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது.
தமிழகத்தில் 60 சதவீதம் சாலை விபத்துக்களில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலேயே நடக்கின்றன. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 14,300 பேர் இறந்துள்ளனர். இது தவிர கடற்கரை, ஏரி போன்றவற்றில் குடிபோதையில் முழ்கி இறந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த கோரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இன்று (24-ந் தேதி) முதல் ஜனவரி 2-ந் தேதி வரை மாநிலம் தழுவிய மது எதிர்ப்பு பிரசார இயக்கத்தை நடத்த உள்ளோம்.

இந்த பிரசாரத்தின் போது தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பேரணி, மனித சங்கிலி, பொது கூட்டம், தெருமுனை பிரசாரம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் மூலம் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்த உள்ளோம். மேலும் மதுவை ஒழிக்க கோரி பொது மக்களிடம் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி.மாலைமலர்

23 டிசம்பர், 2010

ஹலாலான உழைப்பின் சிறப்பு

M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை.

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203) நன்றி:மனாருல்ஹுதா ஜூலை ௨00௭


போலி முல்லாக்கள்

ஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில் முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. முஸ்லிம்கள், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். தன் கையே தனக்குதவி என்று பாடு படுகிறார்கள். பட்டம், பதவி, சொத்து, சுகங்களை அடைகிறார்கள். பல தலைமுறைகளுக்குத் தேவையானதை இவர்களே சேர்த்து வைக்கிறார்கள். அது மட்டுமல்ல! இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களுக்கும் அள்ளித் தருகிறார்கள்.

இங்கு இவர்களது கை மேலேயும் (கொடுப்பதாகவும்) முல்லாக்களின் கை கீழேயும் (வாங்குவதாகவும்) இருப்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். தங்களின் இவ்வுலகத் தேவையைக்கூட சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்கும் இந்த போலி முல்லாக்கள், இவர்கள் எப்படி நாளை மறுமையில் நமக்குச் சொர்க்கத்தைப் பெற்றுத்தர முடியும்? என்று முஸ்லிம்கள் சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தால் உண்மையை இவர்களாலும் உணர முடியும்.

“கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?” என்று தமிழ் வழக்கில் கூறுவது போல இவ்வுலக அற்பத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்கள்; சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்பவர்கள்; மறு உலக வாழ்க்கைக்கு உரியவற்றை இந்த மக்களுக்கு எப்படி பெற்றுத்தர போகிறார்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள். அவர்களின் ஏமாற்று வித்தை எளிதாகப் புரிந்துவிடும். இவர்களின் பிடியில் இருந்து விடுபடாதவர்கள் பரிதாபத்துக்குறியவர்களே.

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (33:67)

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே முல்லாக்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். அவர்களை நம்பிச் செயல்படாதீர்கள். நீங்களே களத்தில் இறங்குங்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் குர்ஆன், ஹதீஸ் துணையோடு சரிபாருங்கள். எப்படி உலக காரியங்களில் நீங்களே உழைத்து பாடுபடுகிறீர்களோ அதே போல் மார்க்க காரியங்களில் நீங்களே முயற்ச்சி செய்து குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை பாருங்கள். “குர்ஆன், ஹதீஸ் விளங்காது” என்று ஓலமிடுவதை நீங்கள் நம்பாதீர்கள்.

குர்ஆன், ஹதீஸ் விளங்க 16 கலைகள் கற்ற பண்டிதர்களே விளங்க முடியும் என்று ரீல் விடுவார்கள். கலப்படம் மூலம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வியாபாரிகள் கலப்படம் இல்லாத பொருள்களை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை மறைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். காரணம் மக்களுக்கு அது தெரிந்துவிட்டால் அவர்களது வியாபாரம் படுத்துவிடும். அதுபோல் இந்த போலிகளும் மார்க்கத்தை கலப்படமாக்கி மதமாக்கிவிட்டதால், உண்மை மார்க்கத்தை மக்கள் நெருங்குவதிலிருந்து தடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

அவர்களை நம்புவதைவிட, உங்களைப் படைத்த அல்லா‹வை நம்புங்கள். அவன் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்று பல இடங்களில் வாக்களித்துள்ளான். மேலும் நபி (…ல்) அவர்கள் நடைமுறைகளுக்கு தேவையானவற்றை விளக்கியும், நடைமுறைப்படுத்தியும் காட்டித் தந்திருக்கிறார்கள். எனவே குர்ஆன், ஹதீஸ் முயற்சிப்பவர்களுக்கு தாராளமாகவே விளங்கும்.

எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். அல்குர்ஆன் (29:69)

நன்றி.ரீட்இஸ்லாம்

22 டிசம்பர், 2010

9-ம் வகுப்பு படித்து முடித்ததும் 14 வயதில் எம்.சி.ஏ., படிக்கும் மாணவன்

ம் வகுப்பு படித்து முடித்ததும் 14 வயதில் எம்.சி.ஏ., படிக்கும் மாணவன்" src="http://mmimages.mmnews.in/Articles/2010/Dec/3720de7b-7899-46b5-a795-e994597bbc55_S_secvpf.gif" alt="9-ம் வகுப்பு படித்து முடித்ததும் 14 வயதில் எம்.சி.ஏ., படிக்கும் மாணவன்" style="height: 225px; width: 300px; border-width: 0px; display: block;">

கோவையை சேர்ந்தவன் முகமது சுகைல். மேஸ்நெட் பயிற்சி நிறுவனத்தில் எம்.சி.ஐ.டி.பி. படிப்பில் பயிற்சி பெற்றான். 9-ம் வகுப்பு படித்துள்ள மாணவன். முகமது சுகைல் 14 வயதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பிற்கு தேர்வாகி உள்ளான்.
அவனுக்குள் ஒளிந்திருக் கும் திறமையை அவனது 12-வது வயதிலேயே மேஸ்நெட் அடையாளம் கண்டு கொண்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவனுக்குள்ள அபார ஆர்வமும் பெற்றிருந்த அறிவும் வெளிப்பட்டது.

தனது குடும்பத்தினர் மற்றும் தாத்தா கொடுத்த ஊக்கத்தின் விளைவாக 12-வது வயதிலேயே ஆன்லைன் குளோபல் சான்றிதழ் பெற்றான். மைக்ரோசாப்ட் அளிக்கும் சமீபத்திய பயிற்சியான எம்.சி.ஐ.டி.பி. உள்பட மேஸ்நெட் அளிக்கும் பல்வேறு சான்றிதழ் படிப்புகளில் இதுவரை 13 சான்றிதழ்கள் பெற்றுள்ளான்.

முகமது சுகைல் பெற்றுள்ள இந்த அபார ஆற்றலுக்கு பரிசாக பாரதியார் பல்கலைக்கழகம் அவன் 9-வது படித்து முடித்த வுடன் 14-வது வதில் எம்.சி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொண்டது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. பயிலும் மாணவர்களில் மிக இளவயதுக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

எம்.பி.ஏ. படிப்பிக்குப் பிறகு அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவதை அடுத்த குறிக்கோளாகக் கொண்டுள்ளான். அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிக இளவயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையையும் இவருக்கு சொந்தமாகப் போகிறது.

நன்றி.மாலைமலர்

கறிவேப்பிலை: புற்று நோய் அபாயத்தை தடுக்கும்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

சிவகுமார், சித்த‍ மருத்துவர்.

Posted by PUTHIYATHENRAL

தகவல் : குவைத் தமிழ் இஸ்லாமிக் கமிட்டி


இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை வெறுப்பவர்கள் அமெரிக்க ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டியது விக்கி லீக்ஸ்

இந்தியாவில் வாழும் பெரும் பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும் பவில்லை என்றும், அவர்கள் தேசியத் திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய முஸ்லிம்கள் எப்போதும் சமாதான சக வாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள் முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி பயங்கரவாத குற்றச் சாட்டில் பாதிக் கப்படுகின்ற னர் என்ற அவல தகவல்கள் எல்லோ ரும் அறிந்த ஒன்றுதான். எனினும் அமெரிக்கக் தூதர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது சாத்தான் வேதம் ஓதுகிறது என ஒதுக்கி விடலாம். எனினும் ஓங்கி அறையும் விதமாக ஒலிக்கும் உண்மையை, உலகம் அறியும் உண்மையை மறைக்க முடியாது என்பதையே இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் அமெரிக்கத் தூதரகங் கள் தங்களது தலைமை யிடத் துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங் களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக் காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதர வைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாக இருக்கிறார்கள் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கெ டுப்பு பெரும் பங்கு வகிப்பதை இந்த ஆவணம் வெளிச்சப்படுத்தியுள்ளது. பெரும் பாலான முஸ்லிம் இளைஞர்கள் சமூகங் களுடன் சமூகத்துடன் கலந்துவிட விரும்பு வதால், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

-தமிழ்மாறன்

பள்ளப்பட்டி:அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த சமுதாயம்!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராகும். இந்தப் பகுதியை சில சமூகவிரோதிகள் விபச்சார பகுதியாக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க பள்ளப்பட்டி மக்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளர் அபுதாஹிர், ஒரு குடும்பப் பெண்ணுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்தது நேரடியாக பெண் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண் வீட்டாரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 12.12.2010 இரவு சுமார் 9 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தகாத உறவுக்காக (விபச்சாரத்திற்காக) அதிமுக நகர செயலாளருக்காக வந்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும் ஷாஜஹான், கண்ணன் ஆகியோர்தான் தங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினர் என்றும் கூறியுள்ளனர்.

இதில் ஷாஜஹான் என்ற நபர் தற்போது ஊரில் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோபம் கண்ணன் மேல் திரும்பியது. கண்ணன் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர். இவர் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே ‘கௌரி மெஸ்’ என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறார். கடையின் பின்புறம் கண்ணனின் குடும்பம் உள்ளது.



பொதுமக்கள் கண்ணனின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவரும், சமுதாய நலன் விரும்பிகளும் அவர்களைத் தடுத்துள்ளனர். இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கண்ணனைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

மறுதினம் 13.12.2010 அன்று இது சம்பந்தமாக, பள்ளப்பட்டி உலமாக்கள் சபை மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அழைப் பின் பேரில் அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், தவறான பாதையில் பிடிபட்ட பெண்களை ஜமாஅத் மூலமாக நடவடிக்கை எடுப்பது என்றும், அந்தப் பெண்களிடம் தகாத நட்பை வைத்திருந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கும் போதே பொதுமக்களில் சிலர் அதிமுக நகர செயலாளர் அபுதாஹிரின் மருந்துக்கடையையும், அதன் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது அத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்த முஹம்மது ஹக்கீம், இக்பால் ஆகிய இரண்டு தமுமுக உறுப்பினர்களை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தகவல் அறிந்தவுடன் தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்றனர். அங்கு ஆய்வாளர் இல்லாத நிலையில் அவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு தமுமுக உறுப்பினர்களை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இரண்டு பேரையும் விசார ணைக்காக அழைத்து வந்ததாகவும், அவர்களை விடுவித்து விடுவோம் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் போலீசார் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஐந்து பேரை பிடித்துச் சென்றனர். மேலும் பலரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் கரூர் மாவட்ட தமுமுக பொறுப் பாளரும் மாநில துணைச் செயலாளருமான கோவை சாதிக் அவர்களை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து விரிவாகக் கூறினர். மாநில துணைச் செயலாளர், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.



இதையடுத்து 14.12.2010 அன்று காலை 11 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த தமுமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து தமுமுக போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பள்ளப்பட்டி பொதுமக்கள், பள்ளப்பட்டியின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து கடைகளையும் அடைத்தனர். பள்ளப்பட்டியில் தமுமுக நிர்வாகிகள் தலைமையிலான சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையும், சாலை மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை, நள்ளிரவில் கைது செய்த ஐந்து நபர்களையும் உடனடியாக விடுதலை செய்தது. தமுமுக உறுப்பினர்களை விடுதலை செய்வதாக உறுதியளித்தது.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமுமுக நிர்வாகிகள் மீது கோபடைந்த காவல்துறை அதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்த முஹம்மது ஹக்கீம் மற்றும் இக்பால் ஆகிய இருவர் மீதும், இந்து முன்னணியைச் சேர்ந்த கண்ணன் வீட்டை தாக்கியதாகவும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைப்பட்ட இருவரையும் ஜாமீனில் எடுப்பதற்கான பணிகளில் தற்போது பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி.தமுமக

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்

இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-&இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய ரகசிய சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னதான் அமெரிக்க ஆதரவு பரப்புரை நிகழ்த்தினாலும் மத வாத காவி பயங்கரவாதம் குறித்தும் அதன் கொடூரங்கள் குறித்தும் தொடர்ந்து அதன் தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இஸ்ரேல் அதிகார வர்க்கத்தினருக்கு நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் சர்வதேச பாசிஸ்டுகள் உள்நாட்டு பாசிஸ்டுகளோடு கரம் கோர்த்திருப்பதாகவே நடுநிலையாள ர்கள் கருதுகிறார்கள்.

பயங்கரவாத (!) தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் ஏற்படுத் தியுள்ள நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவி முகாமின் தீவிர தலைவர்கள் பார்வையிட்டதோடு இஸ்ரேலின் விமான வியாபார மையங்களைப் பார்வையிடும் திட்டமும் உள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

-ஹபீபா பாலன்

நன்றி.தமுமுக

20 டிசம்பர், 2010

கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதல் : பள்ளி மாணவியர் 4 பேர் பலி: டிரைவர் கைது

கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ், எதிரே வந்த பள்ளி மாணவ, மாணவியர் வேனில் மோதியதில், நான்கு மாணவியர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர், கைது செய்யப்பட்டார்.


கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 19 மாணவ, மாணவியரை ஏற்றிய, தனியார் வேன் (டி என் 31 9788), நேற்று காலை, கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்மங்குப்பத்தை சேர்ந்த மணிவேல் (23) வேனை ஓட்டினார். கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் ஐயனார் கோவில் அருகே, காலை 7.35 மணிக்கு வேன் வந்தது. கடலூரில் இருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி ஊழியர்கள் 15 பேரை ஏற்றி (டி என் 21 ஏ வி 0046) ஆம்னி பஸ், பெரியக்குப்பம் சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ்சை முந்தி சென்று, திடீரென இடது பக்கமாக திரும்பிய போது, முன்னால் சைக்கிளில் சென்ற செம்மங்குப்பம் சிவலிங்கம் (60) மீது மோதியது. இதையடுத்து, ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகன் (30), பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த பள்ளி வேன் டிரைவர், வேனை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் ஆம்னி பஸ், வேன் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, சாலையில் உருண்டது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் வேனின் வலதுபுறம் பெயர்ந்து, 20 மீட்டர் தூரத்தில் விழுந்தது. வேன் இருக்கையுடன் மாணவ, மாணவியர் 10 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு, சாலையோர பள்ளத்தில் விழுந்தனர்.


இந்த கோர விபத்தில், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவியரான திருச்சோபுரம் பெருமாள் மகள்கள் அபிராமி (15), அகிலாண்டேஸ்வரி (12), பெரியக்குப்பம் ராமச்சந்திரன் மகள் பவித்ரா (14) சம்பவ இடத்திலேயே இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, அவ்வழியே வந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் மூலம், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திவ்யா (15), நிஷா (17), தரணி (11), சாந்தநேசன் (7), கனிஷ்கா (9), முகிலன் (4), சங்கவி (14), ஜெயசுதா ஆகியோர், மேல் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ராவின் சகோதரி திவ்யா (15) இறந்தார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


விபத்து குறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம் மைலம் அடுத்த குன்னம் கிராமத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகனை கைது செய்தனர். இவர் கிரேன் இயக்குபவர் என்றும், வழக்கமான டிரைவர் வராததால், ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றதாக விசாரணையில் தெரிந்தது .

விபத்தில் இறந்த பள்ளி மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார். கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கடலூர் சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த மாணவிகளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவிகளை செய்யும். அடிக்கடி பள்ளி வேன்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வாகனங்களுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கிறதா என்று தெரியவில்லை. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு அரசு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும். விபத்தில் இறந்த பள்ளி மாணவிகளுக்கு, முதல்வரிடம் எடுத்துக் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நன்றி.தினமலர்

ராஸல்கைமாவில் விளையாட்டுப் போட்டியில் தமிழக‌ மாணவ‌ருக்கு த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம்



துபாய் : துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌து ராஸ‌ல் கைமா அமீர‌க‌ம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.ஏ.இ., உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவ‌ர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் ச‌மீப‌த்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு நாட்டைச் சோ்ந்த மாணவ,மாணவிகளும் பங்கேற்றன‌ர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த ம‌ர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனிய‌ர் பிரிவில் லாங்க் ஜம்ப்பில் முன்னோடியாய் வந்து தங்கப்பதக்கம் வென்றார்.இவ‌ர் கடந்த டிசம்ப‌ர் 3ம் தேதி நடந்த யு.ஏ.இ., தேசிய நாள் கொண்டாட்டத்தில், மாணவ‌ர்களுக்காக நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொ்ந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூராகும்.

18 டிசம்பர், 2010

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தக

கடலூர், டிச.18-
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.
கல்குணம், மருவாய், மருதூர், பூதங்குடி, எல்லைக்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள், பயிர்கள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து திருநாரையூர், கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, மெய்யாத்தூர், பூலாமேடு, குமராட்சி, சிவாயம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், குடிசைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மத்தியக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி மதிப்பிலான சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. 54 ஆயிரம் எக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2711 எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் பயிர் பாதிப்பு மற்றும் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். தமிழ் நாட்டில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது ரூ.117 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. அது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள் வதற்காக ரூ.368 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடியில் நிரந்தர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு என்.எல்.சி. உடன் இணைந்து கூட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

நன்றி.மலைமலர்

ஆயுர்வேத மருத்துவம் : முஸ்லிம் சகோதரிகள் சாதனை!

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் பி.எல்.வி., ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பஸ்னா, ஹஸ்னா. ஒரே வகுப்பில் படித்த இந்த இரட்டைச் சகோதரிகள் மொத்த மதிப்பெண் 1850-ல் 1308 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சர்மா குறிப்பிடுகையில், ‘ஆயுர்வேத படிப்புக்கு சமஸ்கிருத அறிவு தேவை. இதனால் இந்த படிப்பை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஆனால் இந்த சகோதரிகள் தைரியமாக படிப்பைத் தேர்வு செய்து, கடுமையான உழைப்பின் காரணமாக ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்’ என்றார்.

இவரது தந்தை ஹம்சா குறிப்பிடுகையில், “அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒன்றாகப் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே வகுப்பில் படித்த என் மகள்கள், ஒரே மாதிரியாக கல்லூரியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நான் 25 ஆண்டுகளாக அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு தீங்கு இழைக்காதவை. அதிகப்படியாக முஸ்லிம் மாணவ / மாணவிகள் இதில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கு சமஸ்கிருதமும், உருதும் மிக மிக அவசியம்.

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்

தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.

வாழை என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்றாலும் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த வொரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு வகையில் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார்களை எளிதில் பிரித்தெடுக்க முடியும்.

வாழைநாரில் இருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பை, பாய்கள், திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாழை நார்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறப்புக் காகிதங்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

மேலும் வாழை நார்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் வாழை நார்களைப் பயன்டுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் வாழை நார்களுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம் வாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அறிமுகம் செய்தது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினந்தோறும் ஒரு ஷிப்ட் வீதம் மாதத் திற்கு 26 நாட்கள் வேலை செய்தாலே மாதம் ரூ.22,780 வருவாய் கிடைக்கும். வாழை நாரிலிருந்து உபபொருட்களாகக் கிடைக்கும் வாழைச் சாற்றிலிருந்து திரவ உரம் தயாரிக்க முடியுமா என்று தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழைச்சாறு தவிர மற்ற கழிவுகளை நன்கு மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். அதன்மூலமும் வருமானம் கிடைக்கும். வாழை அதிகம் விளையும் ஒவ்வொரு கிராமத்திலும் தனி நபராகவோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ இத்தகைய மதிப்புக்கூட்டும் தொழிலை எளிதில் செய்ய முடியும்.

வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் தேவைக்கு :

வாழைநார் ஆராய்ச்சி மையம்,
22, நல்லப்பன் தெரு, குரோம்பேட்டை,
சென்னை – 600 044
என்ற முகவரியில் பெறலாம்.
தொலைபேசி : 044-2223 1796. செல்பேசி :94440 15576.

நன்றி.சமுக நீதி

16 டிசம்பர், 2010

ஊழலில் சாதனை நாட்டின் வேதனை



இந்தியத் திரு நாட்டின் பெருமைக்குச் சான்றாக விளங்குவது நம் மக்களின் எளிமையும் நேர்மையுமே ஆகும். அன்றைய தலைவர்கள் பொருளாதார முறைகேட்டில் ஈடுபட அஞ்சியவர்களாய் வாழ்ந்தனர். இருப்பினும் இந்நாட்டில் தான் ஒருவேளை மட்டும் உணவு கிடைக்காத நிலையில் கோடானு கோடி மக்கள் இருக்கின்றனர். மக்களின் வாழ்வில் வசந்தம் கொண்டு வரவில்லையே என்ற ஏக்கத்தில் அன்று இருந்த தலைவர்கள் வேதனை அடைந்தனர். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் ஊழல் கறைபடிந்தவர்களாக மாறத்தொடங்கினர். அதனால் நாட்டின் மானம் சந்திசிரித்தது.பல நூறு கோடி ஊழல்கள், பல்லாயிரம் கோடி ஊழல்கள், என தாண்டி லட்சம் கோடி ஊழல்கள் என ஊழல் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. அதில் தமிழகத்தை ஆளும் திமுக அபார (!) சாதனை படைத்துள்ளது.அதில் மேலும் வேதனையை கூட்டும் விதமாக ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் சாமான்ய மக்களின் உள்ளக்குமுறலை அதிகப்படுத்தியது.அன்று தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவி வகித்த பி.ஜே.தாமஸ், தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (கமிஷனர்) பதவி வகித்து வருகிறார். அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.பி.ஜே.தாமஸ், ஏற்கனவே கேரள மாநிலத்தில் முன்பு உணவுத்துறை செயலாளராக பதவி வகித்தபோது பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் ஊழல் கண்காணிப்பு கமிஷனராக தேர்வு செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், பி.ஜே.தாமசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பி.ஜே.தாமசும் (தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பதவி வகித்த வகையில்) சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அவருடைய கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தனர்.ஊழல் கண்காணிப்பு ஆணையரை பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவினர்தான் தேர்வு செய்ய வேண்டும். தேர்வின்போதே தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பெரும்பான்மை ஆதரவு (பிரதமர், உள்துறை மந்திரி) அடிப்படையில் அந்த பதவியில் தாமஸ் நியமிக்கப்பட்டார்.“அரசு என்னை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது. அந்த பதவியில் நான் தொடர்ந்து இருந்துவருகிறேன்” என்று பி.ஜே.தாமஸ் தெரிவித்தார்.உச்சநீதிமன்றம் அவர் மீது தெரிவித்த கண்டனம் குறித்து கேட்டபோது “நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விஷயம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையான செயல் அல்ல’’ என்று தாமஸ் நழுவினார்.பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இதன்பிறகுதான் அரசு என்னை இந்த பதவியில் நியமித்தது.” என ஆணவமாக அவர் பதில் அளித்திருக்கிறார்.உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைப் பொறுப்பில் இருந்து மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் விலகிக்கொள்ள விரும்புவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பி.ஜே.தாமஸ் பதவியில் நீடிப்பதாகக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் மூலம் பி.ஜே.தாமசை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவே தெரிகிறது.ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைத்து, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஏற்கனவே நடைபெற்று வரும் முயற்சிகளில் தற்போதைய இந்த நியமனமும் முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது. கோடானுகோடி பணம் சுருட்டப்பட்ட ஊழலில் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது என்பது தெளிவாகி விட்டது. தற்போது ஊழல் குற்றச்சாட்டின் சந்தேக முள், முழுமையாக மத்திய அரசின் மீது பாய்வதால், இந்த ஊழலின் பயனாளிகள் யார் என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டில் உண்மையைக் கண்டறிய விடாமல், மத்திய கண்காணிப்பு ஆணையத்தையே தலையிடக்கூடாது என்று சொன்னவரையே, அந்த ஆணையராக நியமனம் செய்து உள்ள மத்திய அரசு, அந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, பி.ஜே. தாமஸை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தமிழக அரசின் செயலை ஒடுக்கிட வும் மற்றும் அதனை தாலாட்டி சீராட்டி வரும் மத்திய அரசும் தனது பொருளாதார முறைகேடுகளையும் ஊழலையும் ஒழித்துக்கட்ட இனியும் முன்வராவிட்டால் மக்கள் தீர்ப்பின் முன் அவர்கள் அடையாளம் காணாமல் போவார்கள் என்பது உறுதி.
நன்றி.தமுமுக.காம்

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சேத்தியாத்தோப்பு : அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலையின் அனைத்து பேரவைகள் சார்பில் 15 தினங்களுக்கு முன் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் 15ம் தேதி சர்க்கரை துறை ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்தன. இதன்படி நேற்று காலை முதல் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். பின்னர், நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தொழிற் சங்க நிர்வாகிகள் பஞ்சநாதன், கணேசன், வேலன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்கள் ஆலை வளாகம் முன் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலையின் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் பங்கேற்க வில்லை என்பது குறிப்பி டத்தக்கது.

நன்றி.தினமலர்

அதிர்ச்சி ரிப்போர்ட்!!! .. சிக்கன் 65




ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?கேன்சர் ஆபத்து!இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்