மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பூரண மதுவிலக்கு கோரி பிரசாரம் செய்கின்றனர்.
கோவை மாநகர ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் சிக்கந்தர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிட பன்மடங்கு பெருகியுள்ளது. பள்ளிக்கூட மாணவர்களிடமும் மதுப்பழக்கம் அதிகரித்து விட்டது. 2003ல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்த போது ஆண்டின் விற்பனை 3500 கோடியாக இருந்தது. இப்போது 14 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது.
தமிழகத்தில் 60 சதவீதம் சாலை விபத்துக்களில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலேயே நடக்கின்றன. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 14,300 பேர் இறந்துள்ளனர். இது தவிர கடற்கரை, ஏரி போன்றவற்றில் குடிபோதையில் முழ்கி இறந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த கோரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இன்று (24-ந் தேதி) முதல் ஜனவரி 2-ந் தேதி வரை மாநிலம் தழுவிய மது எதிர்ப்பு பிரசார இயக்கத்தை நடத்த உள்ளோம்.
இந்த பிரசாரத்தின் போது தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பேரணி, மனித சங்கிலி, பொது கூட்டம், தெருமுனை பிரசாரம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் மூலம் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்த உள்ளோம். மேலும் மதுவை ஒழிக்க கோரி பொது மக்களிடம் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி.மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக