#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 டிசம்பர், 2010

வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவா; பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:


இந்துகளின் புனித தளங்களில் ஒன்றான வாரணசியில் டிசம்பா; 7, 2010 அன்று நடந்துள்ள குண்டு வெடிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. குண்டுவெடிப்பில் காயமடைதோருக்கும் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது ஆழ்ந்த ஆறுதலையும், இரங்களையும் தெரிவிக்கிறது.

இது போன்ற மிருகதனத்திற்கும் கீழான வெறிச் செயல்களை யாரும் சகிக்க முடியாது. இந்த குண்டு வெடிப்புக்கு பின்னால் இருக்கும் சதிகளையும் உண்மை குற்றவாளிகளையும் முறையான விசாரணைகள் மூலம் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.


வாரணாசி குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக சில முஸ்லிம் அமைப்புகளின் பெயரை உடனே வெளியிட்டது விசாரணையை திசை திருப்பவும் உண்மை குற்றவாளிகள் தப்பிக்கவும், வழிவகுப்பதாக உள்ளது.

ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல், நான்டெட், ஜெய்பூர்,; அஜ்மீர் தர்கா, சம்யுட்டா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த போது அந்த பழி உடனடியாக சில முஸ்லிம் அமைப்புகள் மீதும் அப்பாவிகள் மீதும் சுமத்தப்பட்டது.


பயங்கரவாத தடுப்பு படையும் சி.பி.ஐ.யும் நேர்மையான விசாரணையை பாரபட்சம் இன்றி நடத்தியதன் விளைவாக மேற்க்கண்ட குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியான சங்பரிவாரத்தின் ஒரு பிரிவான ‘ அபிநவ் பாரத்’ அமைப்பினா; என்பது தெரியவந்தது. பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் இராணுவ அதிகாரி லெப். கர்ணல் புரோகிட் உள்ளிட்ட சங்பரிவார முக்கிய புள்ளிகளுக்கு குண்டு வெடிப்பில் பங்கிருப்பது நிருப்பிக்கப்பட்டது. ஆயினும் உடனடியாக விசாரணை முடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவில்லை அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் பயங்கரவாத செயல்களை செய்வோருக்கு அது ஒரு பாடமாக இருந்திருக்கும்.


எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் அவசர கதியில் கற்பனை அமைப்புகள் மீது குற்றம் சுமத்திவிட்டு உண்மை குற்றவாளிகளை தப்ப விட்டு விடக்கூடாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

நன்றி.தமுமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக