நபி (ஸல்) அவர்களே நமக்கு அனைத்துத் துறைக்கும் முன்மாதிரி! நபித் தோழர்களுடன் துன்பத்திலும் துயரத்திலும் பங்கெடுத்ததைப் போன்று மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் இணைந்திருந்தார்கள். சிறுவர்களுடன் விளையாடினார்கள். மனைவியர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். பிறர் சிரிக்கும் அளவுக்கும் சிந்திக்கும் அளவிற்கும் உரையாடினார்கள். உண்மையான செய்திகளைக் கூறி கேலியும் செய்தார்கள். |
மகிழ்ச்சியாக இருப்பதையும் சிரிப்பதையும் விளையாடுவதையும் மார்க்கப் பற்றுக்கு முரணாக கருதும் சகோதரர்களும் நம்மிடையே உள்ளனர். சோகம் வடிந்த முகமும் அனைத்தையும் இழந்த தோற்றமும்தான் இறையச்சத்தின் அடையாளம் எனக் கருதுகிறார்கள்.
இஸ்லாத்தின் வரையறைகளை முழுமையாக அறியாதிருப்பதே இதன் காரணம் எனக் கூறலாம். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகும். இயற்கைகளில் சிறந்தவை அனைத்தையும் அது அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பாக மனித வாழ்வில் இன்பம் சேர்க்கும் அனைத்தையும் வரவேற்கிறது.
அல்லாஹ்வை மறக்கச் செய்யாத மகிழ்வுகள் என்றும் அல்லாஹ்வை மறக்கச் செய்வதிலும், அவனுக்கு மாறு செய்வதிலும் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மார்க்கத்தில் இரண்டு வகையாக மகிழ்ச்சிகள் இருப்பதை அல்குர்ஆன் அடையாளம் காட்டுகிறது.
முதல் வகை மகிழ்ச்சியை மார்க்கம் அனுமதிப்பது மட்டுமின்றி அதை வரவேற்கவும் செய்கிறது. சில நேரங்களில் நல்லறங்களின் சன்மானமாகக் கூட மகிழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று, நோன்பைத் திறக்கும் போது, மற்றொன்று அல்லாஹ்வை சந்திக்கும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நெருப்பு வணங்கிகளால் ஆட்சி செய்யப்பட்டு வந்த ரோமாபுரியை வேதவாசிகள் ஆட்சி செய்யும் பாரசீகம் பத்து ஆண்டுகளுக்குள் வெல்லும். அதைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் வெகுமதி களையும் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என்று அல்லாஹ் கூறு கிறான். (பார்க்க அல்குர் ஆன் 30:1-4, 10:57,-58)
இவ்வாறு நல்லோர்கள் அடையும் மகிழ்ச்சியை போற்றும் மார்க்கம், இரண்டாவது வகை மகிழ்ச்சியை தூற்றிக் கொண்டிருப்பதையும் அல்குர்ஆனில் காணலாம்.
தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாத நயவஞ்கர்கள் போர்க்களத்திலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக் கொண்டோம் என்று மகிழ்ச்சி அடைந்ததை அல்லாஹ் விமர்சிக்கிறான். அல்லாஹ்வுக்கு மாறு செய்து இன்று மகிழ்பவர்கள் நாளை நரக வேதனையால் அழுது பரித விக்கப் போகிறார்கள் என்று எச்சரிக்கையும் செய்கிறான்.
மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, சமுதாயத்தை கூறுபோட்டவர்களும் பெரும் சாதனை புரிந்து விட்ட தாக எண்ணி தங்கள் சஹாக்களிடம் மகிழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று அல்லாஹ் விமர்சிக்கின்றான்.
‘மகிழாதே! நிச்சயமாக அல்லாஹ் மகிழ்வோரை நேசிப்பதில்லை’ என்று அல்லாஹ்வை மறந்த பெரு மைக்கார காரூனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க அல்குர்ஆன் 9:81-82, 30:32, 28:76)
எனவே மார்க்கம் தடுத்த மகிழ்ச்சியை தவிர்ந்து கொள்ள வேண்டிய முஸ்லிம்கள் மார்க்கம் அனுமதித்த மகிழ்ச்சியை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளில் சிரிப்பும், விளை யாட்டும் முக்கியமானவை. சிரிப்பு என்பது மனித இன த்திற்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய சிறப்பம் சமாகும். அது புரிந்துணர்வின் வெளிப்பாடு! எனவே சிரிப்பதை மனித இனத்தில் அடையாளமாகவே கூறலாம்.
மனிதனின் இயற்கைத் தேட்டங்களில் ஒன்றுதான் விளையாட்டு. இல்லறமும் இயற்கைத் தேட்டம்தான். எனவே அந்த தேட்டத்தை மட்டும் நிவர்த்தி செய் வேன். அதற்கு முன்னர் மனைவியுடன் விளையாடு வதை தடையாகக் கருதுவேன் என்பது மார்க்க நெறியல்ல.
நபி (ஸல்) அவர்களே நமக்கு அனைத்துத் துறைக் கும் முன்மாதிரி! நபித் தோழர்களுடன் துன்பத்திலும் துயரத்திலும் பங்கெடுத்ததைப் போன்று மகிழ்ச்சியி லும் இன்பத்திலும் இணைந்திருந்தார்கள். சிறுவர்க ளுடன் விளையாடினார்கள். மனைவியர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். பிறர் சிரிக்கும் அளவுக்கும் சிந்திக்கும் அளவிற்கும் உரையாடினார் கள். உண்மையான செய்திகளைக் கூறி கேலியும் செய்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மகிழ்வான வாழ்விற்கு ஆன்மீகம் தடையல்ல என் பதை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி உலகிற்கு உணர்த்தினார்கள்.
நீங்களும் மகிழ இதோ அண்ணலாரின் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் சில:
மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப் பந்தயம் நடத்தினார்கள். அதில் ஒரு தடவை ஆயிஷா (ரலி) அவர்கள் ஜெயித்துவிட்டார்கள். பிறகு மற்றொரு முறை நடந்த பந்தயத்தில் ஜெயித்த நபி (ஸல்) அவர்கள் ‘அதற்கு பகரம்தான் இது’ என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வந்த மூதாட்டி ஒருவர் ‘அல்லாஹ் என்னை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்ய துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கு அவர் கள், சொர்க்கத்தில் வயோதிடர்கள் நுழைய மாட்டார் கள் என்றார்கள். இதனை கேட்டு அப்பெண்மணி அழத் துவங்கியபோது, நீங்கள் சொர்க்கத்தில் வாலிபப் பெண்ணாக நுழைவீர்கள் என்று கூறி, 56:35-,37 ஆகிய வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.
வாகனத்தில் ஏற்றிக் கொள்ளுமாறு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், நான் உன்னை ஒட்டகக் குட்டியில் ஏற்றிக் கொள்கிறேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே ஒட்டகக் குட்டியை வைத்து என்ன செய்வது? என்று கேட்டார். ஒட்டகம் ஒட்டகக் குட்டியைத் தவிர வேறொன்ரைப் பெற்றெடுக்கவில்லையே! என்றார்கள்.
உம்மு அய்மன் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னுடைய கணவர் உங்களை அழைக்கின்றார் என்றார்கள். யார் அவர், கண்ணில் வெள்ளை இருக்குமே அவர்தானே? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவருடைய கண்ணில் வெள்ளையே இல்லையே என்று அப்பெண்மணி கூற, ஆம், நிச்சயமாக வெள்ளை இருக்கிறது என்று நபி (ஸல்) கூற, அதனை மீண்டும் அவர் மறுக்க, இறுதியாக நபி (ஸல்)அவர்கள் ‘கண்ணில் வெள்ளை நிறம் இல்லாதவர் யாரும் இல்லையே! என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னு டைய வீட்டில் நபி (ஸல்) அவர்களும் சவ்தா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (கோதுமை மாவு, பால், நெய் ஆகியவை கலந்த) ஹாறிரா எனும் உணவைச் செய்து கொண்டு வந்து, சவ்தா அவர்களைச் சாப்பி டச் சொன்னேன். எனக்கு அது பிடிக்காது என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இதை சாப் பிட்டே ஆக வேண்டும்! இல்லை என்றால் அதனை உமது முகத்தில் பூசுவேன் என்றேன். நிச்சயமாக அதனை நான் சாப்பிட முடியாது என்றார். உடனே பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து அவருடைய முகத்தில் பூசினேன்.
எங்களிடையே நபி (ஸல்) அவர் கள் அமர்ந்திருந்தார்கள். என்னிடமிருந்து சவ்தாதை காப்பாற்ற தனது தொடையை தாழ்த்தினார்கள். நான் பாத்திரத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அதனை என் முகத்தில் தடவிக் கொண்டேன். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் பெருநாள் தினத் தன்று இரண்டு சிறுமிகள் பாட்டுப் படித்துக் கொண் டிருந்ததைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விரு வரையும் கண்டித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர் கள், அபூபக்ரே! அவர்கள் இருவரையும் விட்டு விடுங்கள்! இது பெருநாள் தினம்! என்றார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘புஆஸ்‘ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னி டம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு புறமாகத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக் கருவிகளா- என்று கூறி என்னைக் கடிந்து கொண் டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி ‘‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்’’ என்றனர். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறி விட்டனர். (புகாரி:949)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளை யாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல் லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ ‘‘நீ பார்க்க ஆசைப் டுகிறாயா?’’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) ‘‘அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’’ என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது ‘‘உனக்குப் போதுமா-?’’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘‘அப்படியானால் (உள்ளே) போ’’ என்று கூறினார்கள். (புகாரி: 950)
இன்னும் இது போன்ற எத்தனையோ சந்தர்ப்பங் கள்! நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கும் முன் மாதிரிதான்! ஆன்மீகம் என்ற போர்வையில் உலக இன்பத்தையும் வாழ்வின் மகிழ்வையும் இழந்து விடக் கூடாது என்பதை அற்புதமாக ஹன்ளலா (ரலி) அவர்களுக்கு செய்த உபதேசத்தின் மூலம் உலகிற்கு உபதேசித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களது மஜ்லிஸில் உட்கார்ந் திருக்கும்போது ஏற்படக் கூடிய ஆன்மீக உணர்வு, வீட்டிற்கு வந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும்போது குறைந்து விடுவதை ஹன்ழலா (ரலி) நபியவர்களிடம் முறையிட்ட சந்தர்ப்பத்தில், அவ்வாறு ஒரு நேரத்திலும், இவ்வாறு ஒரு நேரத்திலும் (அதாவது ஆன்மீக பக்தியுடனும், குடும்ப வாழ்வில் மகிழச்சியுடனும்) இருக்க வேண்டும் என ஹன்ழலா (ரலி) அவர்களுக்கு வழிகாட்டினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
31:6 வசனத்தின் அடிப்படையில் அனைத்து விளையாட்டுக்களும் ஹராம் -மார்க்கத்தால் தடுக்கப்பட்டவைதான்- என்று சிலர் கருதுவது தவறாகும். விளையாட்டும் வீணான பொழுது போக்கும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்தால், அதனை கேலி செய்யும் விதத்தில் அமைந் தால் நிச்சயமாக அது ஹராம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வாறு அமையாத பட்சத்தில் விளை யாடுவதிலோ, பொழுது போக்குவதிலோ தவறில்லை. இதற்கு 62:11 வசனத்தையும் சான்றாகக் கொள்ளலாம்.
அளவுக்கு மீறி, அதிகமாகச் சிரிப்பதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதிகமாக சிரிக்காதீர்! சிரிப்பு உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும் என்பது நபிமொழி.
எனவே, இஸ்லாம் கூறும் வரையறைகளுக்குள் மகிழ்ச்சியாக வாழ அல்லாஹ் எல்லோருக்கும் உதவி
செய்வானாக!
- ஹவ்வா மைந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக