#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

07 டிசம்பர், 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் "பஞ்சர்' ஆனது சாலைகள்

சிதம்பரம் : தொடர் மழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வெள்ள நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து போக்குவரத்து துவங்கிய நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதி சாலைகள் அத்தனையும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது.


சிதம்பரம் நகரில் பிரதான நான்கு வீதிகளில் ஆங்காங்கே சாலையில் பள்ளம் உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தில் நடந்து கூட செல்ல முடியாத அளவில் மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளது. நகர் பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து சிறிய அளவில் கற்கள் சாலையில் கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி விடுகிறது. நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அதேபோன்று காட்டுமன்னார்கோவில் செல்லும் குமராட்சி வழியில் மெய்யாத்தூர் , திருநாரையூர் பகுதியில் சாலைகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.அதேபோல் புத்தூர் வழியில் கொடியாளம் மற்றும் டி.நெடுஞ்சேரி புத்தூர் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள "மெகா' பள்ளத்தால் வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாக தட்டுத்தடுமாறி செல்கிறது. குறிப்பாக காட்டுமன்னார்கோவில் திருச்சி செல்லும் வழியில் வீராணந்தபுரத்தில் வெண்ணங்குழி ஓடையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, சாலையில் வழிந்தோடியதால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலையின் இரு புறமும் அரிப்பு ஏற்பட்டு சாலையே காணாமல் போயுள்ளது. பகல் நேரத்தில் வாகனங்கள் சென்றால் கூட இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக