திருச்சி : திருச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், காரில் இருந்த அசல் ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலராக இருப்பவர் ஜெயினுல் ஆபுதீன் (48). திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் உஸ்மான் அலி தெருவில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். கடந்த 6ம் தேதி திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அன்றிரவு திருச்சி திரும்பிய அவர், அப்படியே சொந்த வேலை விஷயமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு சென்றுவிட்டார். அவரது, "டாடா இண்டிகா' (டி.என்-58 பி1764) காரை, அவர் தங்கியிருந்த காம்ப்ளக்ஸ் முன் நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், சில மர்ம நபர்கள் அவரது கார் பின்புறம் மட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளை கருங்கல்லால் அடித்து உடைத்தனர். காரின் முன்புறம் இருந்த சிறிய கொடியையும், கொடி ஸ்டாண்டையும் அடித்து உடைத்தனர். காருக்குள் நுழைந்து டேஷ்போர்டில் இருந்த ஒரிஜினல் ஆர்.சி., இன்சூரன்ஸ் ஆவணங்கள் மற்றும் 1,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றனர். ஜெயினுல் ஆபுதீன், கன்டோன்மென்ட் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக