ஜெய்ப்பூர் : அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு தேவையான குண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்திய காரை, ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படை கூடுதல் எஸ்.பி., சத்தியேந்திர சிங் கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா அருகே, குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அஜ்மீரைச் சேர்ந்த தேவேந்திர குப்தா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் லாவே மற்றும் லோகேஷ் சர்மா, ஹர்ஷத்பாய் சோலங்கி, முகேஷ் வாசனி என்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சோலங்கிக்கு, 2004ம் ஆண்டு வதோதராவில் நிகழ்ந்த பெஸ்ட் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உண்டு. இந்நிலையில், அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு தேவையான குண்டுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சான்ட்ரோ காரை பறிமுதல் செய்துள்ளோம். இந்தூரில் இருந்து அதை கொண்டு வந்துள்ளோம். இந்த காரை சுனில் ஜோஷி என்பவன் பயன்படுத்தியுள்ளான். அவன், இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே இறந்து விட்டான். அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் ஒரு ஆதாரமாக இந்த கார் இருக்கும். இவ்வாறு சத்தியேந்திர சிங் கூறினார்.
இதுபோல் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கு பயங்கரவாத செயலில் இடுப்படும் காவி பயங்கரவாத கும்பலை கண்டுயறிந்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா அமைதி பூங்காவாக மலரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக