இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சர்மா குறிப்பிடுகையில், ‘ஆயுர்வேத படிப்புக்கு சமஸ்கிருத அறிவு தேவை. இதனால் இந்த படிப்பை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஆனால் இந்த சகோதரிகள் தைரியமாக படிப்பைத் தேர்வு செய்து, கடுமையான உழைப்பின் காரணமாக ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்’ என்றார்.
இவரது தந்தை ஹம்சா குறிப்பிடுகையில், “அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒன்றாகப் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே வகுப்பில் படித்த என் மகள்கள், ஒரே மாதிரியாக கல்லூரியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நான் 25 ஆண்டுகளாக அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். இவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு தீங்கு இழைக்காதவை. அதிகப்படியாக முஸ்லிம் மாணவ / மாணவிகள் இதில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கு சமஸ்கிருதமும், உருதும் மிக மிக அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக