கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தேன். முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளேன்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்க இடம் முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்னர் பயிர் சேதம், சாலை பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும். இம்மாவட்டம் வடிகாலாக இருப்பதால் நிரந்தர திட்டம் நிறைவேற்றுவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்றார்.
அரசுக்கு 7ம் தேதி அறிக்கை : ககன்தீப்சிங்பேடி பேட்டி : சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், வெள்ள பாதிப்புகள் குறித்து அரசுக்கு 7ம் தேதி அறிக்கை அனுப்பப்படும், என சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், கடந்த 27ம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால், 148 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ன. இந்த கிராமங்களில் நிவாரணப் பணிகள் வழங்குவதற்காக, முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளை பார்வையிட்டேன். மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பது போல் அனைத்து கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.வெள்ள பாதிப்புகள் குறித்து, 7ம் தேதி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு ககன்தீப்சிங்பேடி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக