அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 டிசம்பர், 2010
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சேத்தியாத்தோப்பு : அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலையின் அனைத்து பேரவைகள் சார்பில் 15 தினங்களுக்கு முன் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் 15ம் தேதி சர்க்கரை துறை ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்தன. இதன்படி நேற்று காலை முதல் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். பின்னர், நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தொழிற் சங்க நிர்வாகிகள் பஞ்சநாதன், கணேசன், வேலன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்கள் ஆலை வளாகம் முன் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலையின் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் பங்கேற்க வில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக