பாபரி மஸ்ஜிதை இடித்த 42 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக தொடர் முழக்க போராட்டம் நடைப்பெற்றது .மண்ணை நகரம் இதுவரை கண்டிராத மக்கள் வெள்ளத்தால் மிதந்தது.
மழை வெள்ளம் மிரட்டலுக்கு மத்தியில் காட்டுமன்னார்குடியோ மக்கள் வெள்ளத்தில் விதி எங்கும் கருப்புவெள்ளை கொடிகளுடன் புற்றிசல் என புறப்பட்ட தாமுமுக தொண்டர்கள் கோரிக்கைகளை வலியுர்த்தி முழக்க மிட்டவாரே இருந்தனர்.மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில்.மமக மாநில துணை பொதுச்செயலாளர் .சகோ.தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார்.மா.செயலாளர்.அமானுல்லா,அரபாத்,சமது.மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
எல்லாம் புகழும் இறைவனுக்கே
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 உடன் நிறைவடைகின்றது. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டதுடன் மட்டுமில்லாமல் பாபர் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளும் சுதந்திரமாக உலா வருகின்றார்கள். பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சொத்து வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு செப்டம்பர் 30 அன்று வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அநீதியான தீர்ப்பாக அமைந்துள்ளது. இச்சூழலில்
- பாபர் பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று நீதிபதி லிபரஹான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும்,
- பாபர் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக ரேபேரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும்,
- பாபர் பள்ளிவாசல் சொத்து தொடர்பான அலஹாபாத் உயர;நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்க கோரியும்.
அல்ஹம்துலில்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக