#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

14 டிசம்பர், 2010

வீடுகளை இழந்து பரிதவித்த மக்கள்: நிவாரணம் பெற்றுத் தந்த தமுமுக!

டிசம்பர்&06 தமுமுகவின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்காக தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொரு ஜமாத்தார்களை சந்தித்து அவர்களையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதேபோன்று சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் ஜமாத்தார்களையும் சந்தித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.



மஜித் நகர் வழியாக செல்லும் கூவம் நதியை ஆழப்படுத்துவதாக இருந்த 37 வீடுகள் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் எவ்விதமான ஆதரவும் இன்றி அப்போது நடுத்தெருவில் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ணுற்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களிடம் விஷயத்தைக் கேட்டறிந்தனர். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி வீடுகள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடும் வழங்காமல், பாதிக்கப்பட்டோருக்கு மாற்றிடமும் வழங்காததால் அவர்கள் தெருவிற்கு வந்ததாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அப்பகுதி வார்டு கவுன்சிலரை வார்டு பக்கம் பார்த்தே மாதங்களாகி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. உடனடியாக வீடுகளை இடிக்கப் பயன்படுத்திய கனரக இயந்திரங்களை சிறைப் பிடித்தனர் தமுமுகவினர்.


இயந்திரங்கள் சிறை பிடிக்கப் பட்டதும், அதுவரை உறங்கிக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளுக்கு தகவல் சென்றன.

பகுதி காவல்துறை உதவி ஆணையர், பகுதி காவல்துறை ஆய்வாளர், மாநகராட்சி அலுவலர் மாடசாமி என அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சாலிகிராமம் மஜித் நகரை முற்று கையிட்டன. அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சீனிமுகம்மது, மாவட்டச் செயலாளர் முகம்மது கோரி, பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் அரசுத் தரப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் இல்லை யேல் தமுமுக மக்களைத் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகை யிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. நிவாரணம் கிடைத்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.



தமுமுகவின் வீரியத்தை உணர்ந்த அதிகாரிகள் கூவத்தை ஆழப்படுத்தும் குத்தகை தாரர்களிடம் இருந்து உரிய நிவாரணம் வாங்கித் தருவதாக உறுதியளித்தனர்.

டிசம்பர்-06 அன்று மாலை இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற் கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 37 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வாங்கி தந்தது தமுமுக. இடிக்கப் பட்ட வீடுகளில் 10 வீடுகள் மட்டுமே முஸ்லிம்களுடையது. மற்றவை முஸ்லிம் அல்லாத சகோதரர்களின் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இயக்கத்தினரா?

“பெரும்பாலும் நிவாரணங்கள் வழங்குமிடங்களில் அரசு வழங்கும் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களின் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதத்தை மட்டும் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவார்கள். ஆனால் நீங்களோ 37 லட்சம் ரூபாயில் ஒரு ரூபாய் கூட எடுக்காமல் எங்களுக்காகப் போராடி நிவாரணம் வாங்கித் தந்திருக்கிறீர்கள். இந்த காலத்திலும் இப்படிபட்ட இயக்கத்தினரா?” என்று ஆச்சரிய புருவம் உயர்த்தி னார் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர்.


“என்னோட வீடு இடிக்கப்பட்ட போது நான் நடுத்தெருவில் என் இரண்டு குழந்தைகளுடன் நின்று கொண்டு இருந்தேன். அப்போது எந்தக் கட்சிக்காரர்களோ, என் சாதிக்காரர்கள், என் உறவினர்கள் என்று யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் முகம் தெரியாத நீங்கள் எங்களுக்காக செய்த உதவியை என் ஆயுளுக்கும் மறக்கமாட்டேன”-என்றார் ஆரோக்கியம்.

-ராஃபி மரைக்காயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக