#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

04 டிசம்பர், 2010

கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு

<span title=காஷ்மீர்" width="150" height="181">வெண்பனியால் சிரிக்கும் மலை முகடுக ளும், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகளும், சிலிர்க்க வைக்கும் குளிரும், மனதைப் பறிக்கும் ஆப்பிள் தோட்டங்களும், கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கும் இமய மலையின் நதிகளும் அழகிய காஷ்மீரின் அடையாளங்கள்.

இறைவனால் அன்பளிப்பு செய்யப்பட்ட மண் ணில், எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் இருக்கிறது. அழகான காஷ்மீரில் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை. இப்படி நிறைய ‘இல்லை’கள்!

எங்களுக்குத் தேவை ஒன்றுபட்ட ஒரே காஷ்மீர்! எங்களை நாங்களே ஆளும் உரிமை! இதுதான் பெரும்பாலான காஷ்மீரிகளின் மனநிலை என்பது கருத்துக் கணிப்புகள் கூறும் உண்மைகளாகும்.

காஷ்மீரின் உண்மையான வரலாறு என்ன? அது தமிழ்நாடு உ.பி., மஹாராஷ்டிரா, வங்காளம் போன்று இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியா? அல்லது இந்தியா வுடன் இணைக்கப்பட்ட பகுதியா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகள் பகிரங்கமாக உண்மை யின் வெளிச்சத்தில் நடுநிலையோடு விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர் களின் விருப்பமாகும்.

முந்தைய வரலாறு என்ன?

காஷ்மீரின் தேசியவாதிகள் இது பற்றிக் கூறும் போது, எங்கள் மீதான ஆக்கிரமிப்பு முகலாயப் பேரர சர் அக்பரின் ஆட்சியிலிருந்து தொடங்குகிறது எனக் கூறுகிறார்கள்.

காஷ்மீரின் அழகில் மயங்கிப்போன அக்பர் 1586&ல் தனது முகலாய பேரரசின் கட்டுப்பாட்டில் காஷ்மீரை இணைத்தார். அதிலிருந்துதான் எங்களின் மேலான ஆக்கிரமிப்பு தொடங்குகிறது என்பது அவர்களின் கருத்து!

முகலாய பேரரசு வீழ்ச்சியடைந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கி.பி. 1757&ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தா னின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அஹ்மது ஷா துரானி என்பவர் காஷ்மீரின் அரசரானார்.

பின்னர் 18&ஆம் நு£ற்றாண்டில் லாகூரை மையமாகக் கொண்டு உருவாகிய சீக்கிய அரசோடு காஷ்மீர் இணைக்கப்பட்டது. 1819&ல் ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தவர்.

இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திய ஆங்கிலேயர்கள் வட இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பினர். அப்போது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து சீக்கியப் படைகள் போராடின. அதில் தோல்வியடைந்ததால் அத்தோடு சீக்கிய பேரரசு முடி வுக்கு வந்தது. அவர்கள் ஆட்சிசெய்த இன்றைய பாகிஸ் தானின் பெரும்பகுதிகளும், காஷ்மீரும் ஆங்கிலேயர்கள் வசமானது.

விற்பனை தேசம்?

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை காஷ் மீரை இந்து மன்னர்கள், பௌத்த மன்னர்கள், சீக்கிய மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் என பல மதத்தவரும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காஷ் மீரை தனித்துவத்தோடும், சுய சார்போடும்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தி யாவை ஆண்ட மன்னர்களின் கீழ் காஷ்மீர் இணைக் கப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில் கூட, காஷ்மீர் அதன் தனித்துவமும், சுய சார்பும் பாதிக்கப்படா மலேயே ஆளப்பட்டது என காஷ்மீர் தேசியவாதிகள் கூறுகிறார்கள்.

சீக்கியர்களின் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த குலாப் சிங் என்பவரையே ஆங்கிலேயர்கள் ஜம்மு & காஷ்மீரின் ஆளுநராக நியமித்தனர். இப்படித் தான் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் காஷ்மீர் இணைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்! ஆங்கிலேயர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார் ஆளுநர் குலாப் சிங். அந்த அடிமைத்தனம் ஆங்கிலேயர்களை மிகவும் கவர்ந்தது! அதன் விளைவு காஷ்மீர் விற்பனைக்கு வந்தது!

ஆளுநர் குலாப் சிங்கிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் மார்ச் 15, 1894&ல் ஓர் உடன்படிக்கை ஏற்பட் டது. அதன்படி ஆளுநர் குலாப் சிங் ரூ. 75 லட்சத்துக்கு காஷ்மீரை ஆங்கிலேயர்களிடமிருந்து விலைக்கு வாங்கி னார். அதன் பிறகு தன்னை காஷ்மீரின் அரசராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.

டோக்ரா ஆட்சி

முதல் இந்திய விடுதலைப் போர் நடைபெற்ற 1857&ல் காஷ்மீரை ஆண்ட குலாப் சிங் இயற்கை மரண மடைந்தார். அவரது மகன் ரன்பீர் சிங் 1857 முதல் 1885 வரையும், அவரது மகன் பிரதாப் சிங் 1925 வரை யும் காஷ்மீரை ஆண்டனர். தாத்தா, மகன், பேரனை தொடர்ந்து கொள்ளுப்பேரன் ஹரி சிங் 1925லிருந்து தனது சர்வாதிகார ஆட்சியைத் தொடங்கினார். இவரது ஆட்சி 1948 வரை நீடித்தது. இதை ‘டோக்ரா’ பரம்பரை யின் ஆட்சி என காஷ்மீர் வரலாறு கூறுகிறது.

80 சதவீதம் முஸ்லிம்களும், சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மீதி 20 சதவீதம் என மக்கள் தொகை விகிதாச்சாரத்துடன் இருந்து காஷ்மீரை ஆண்ட டோக்ராமன்னர்கள் கொடுங்கோலர்களாகவே ஆட்சி புரிந்துள்ளனர். 1931&ல் நடைபெற்ற ஒரு மக்கள் புரட்சி, மன்னர் ஹரி சிங்கின் மீது எழுந்த வெறுப்பின் விளைவாகும். அதனை மன்னர் ஹரி சிங் கடுமையாக ஒடுக்கினாலும், அந்த அடக்குமுறைகள்தான் காஷ்மீரில் ஜனநாயக காற்று வீசுவதற்கு சன்னலை திறந்துவிட்டது.

வந்தது காஷ்மீர் சிங்கம்

காஷ்மீர் மக்களின் கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கு ஒரு தலைமை தேவைப்பட்டது. இந்தியாவில் காந்திய டிகளின் தலைமையில் காங்கிரஸ், சுதந்திரப் போராட் டத்தை வழி நடத்திக் கொண்டிருந்தது. அதன் ஜனநாயக தாக்கம் காஷ்மீரில் எதிரொலித்தது.

இங்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி. அங்கு மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி. எனவே எதிரிகள் வேறாக இருந்தாலும் பிரச்சினை ஒன்றுதான்.

1932&ல் “அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. திராவிட இயக்க தலைவர்களால் “காஷ்மீர் சிங்கம்” என்று வர்ணிக்கப் பட்ட ஷேக் அப்துல்லாஹ்தான் அதன் நிறுவனர். ஆறாண்டு காலம் மக்களைத் திரட்டிய இவ்வியக்கம், அரசியல் முதிர்ச்சியின்வெளிப்பாடாக, 1939&ல் ‘தேசிய மாநாட்டு கட்சி’ என பரிணாமம் அடைந்ததும், இன்று வரை காஷ்மீர் அரசியலில் வலுவாக இருப்பதும் பிந்தைய வரலாறுகளாகும்.

<span title=காஷ்மீர்" width="150" height="112">மக்களின் எழுச்சியை கண்டு பத றிய மன்னர் ஹரி சிங், தனது சர்வாதிகார நட வடிக்கைகளிலிருந்து சற்று இறங்கி வந்தார். 1934&ல் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டச பையை அமைத்தார். 1939&ல் நீதித்துறையும் உரு வாக் கப்பட்டது. ஆயினும் இவற்றையெல்லாம் தாண்டி, இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் ஹரி சிங்! இது தான் அவர் ஒப்புக் கொண்ட குறைந்தபட்ச ஜனநாயகம்.

இக்கால கட்டத்தில்தான் ஒன்றுபட்ட பழைய பிரிட்டீஷ் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்தது. காந்தி, ஜின்னா, நேதாஜி, அம்பேத்கர் என இந்திய அரசியல் நான்கு மையங்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இந்திய & பாகிஸ்தான் பிரிவினை குறித்து காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தன.

காஷ்மீர் & இந்தியா & பாகிஸ்தான்

சிக்கல்உருவான பின்னணி

காங்கிரஸில் செயல்பட்ட இந்துத்துவ தீவிரப் போக்கு கொண்டவர்களாலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற பாஸிச அமைப்புகளின் முஸ்லிம் விரோதப் போக்குகளாலும், ஜின்னாவின் பிடிவாதமான அரசி யலாலும் இந்திய துணைக் கண்டம் பிளவுபட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்விளைவாக தங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகளுக்கு புதிய ஆட்சியாளர்கள் விடுதலை அளித்தனர்.

இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முன் வந்தபோது, பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாவது தவிர்க்க முடியாது என ஆங்கிலேயர்கள் கருதினர். அன்றைய பதட்டமானநிலையில், காந்தியின் விருப்பத்திற்கு எதிராக இந்திய துணைக் கண்டம் பிரிக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14 அன்று, பாகிஸ்தான் என்ற ஒருபுதிய நாட்டை உருவாக்கி அதற்கு சுதந்திரமளித்துவிட்டு, அடுத்த நாள் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

நேரு, ஜின்னா, ராஜாஜி, வல்லபாய் படேல் போன்றவர்களின் அரசியல் சுய நலன்களுக்கு முன்னால் காந்திஜியின்¢சமாதானம் தோல்வி யடைந்தது. சகோதரத்துவமும், மனித நேயமும், மனித உரிமைகளும் எல்லைக் கோடுகளில் காவு கொடுக்கப்பட்டது.

பிளவுபட்ட இரு நாடுகளும் அரசியல் பகையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையில் தனித்துவத்தோடு இருந்த காஷ்மீரை தங்களோடு இணைக்க வேண்டும் என்ப தில், இருநாடுகளும் ஒருவருக்கொருவர் தெரிந்தே திட்டமிட்டுக் கொண்டிருந்தன. அப்போதே உருவான அரசியல் சிக்கல்தான் இன்றைய காஷ்மீர்.

பாகிஸ்தானின் வஞ்சகம்! இந்தியாவின் தந்திரம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், பூஞ்ச், கில்கிட், பல்கிஸ்தான் என ஆறு பகுதிகளை கொண்டதுதான் ஒன்றுபட்ட காஷ்மீர்!

1947&ல் இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் போது நாங்கள் யார் பக்கமும் இணைய மாட்டோம். தனித்தே இருப்போம் என அறிவித்தார் மன்னர் ஹரி சிங்.

80சதவீதம் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் காஷ்மீரின் அரசராக இருந்த ஹரி சிங்கிற்கு பாகிஸ்தான் மீது பயமும், இந்தியாவின் மீது காதலும் இருந்தது.

அந்த நேரத்தில் ஒன்றுபட்ட காஷ்மீரின் ஒரு பகுதியான பூஞ்ச் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின்எல்லைக்கருகே இருந்தது. அங்கு மன்னர் ஹரி சிங்கிற்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது.

இதனை அடக்க இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரி சிங். இந்தியப் படைகள் காஷ்மீருக்கு வந்தால், அது பாகிஸ்தானுக்கு ஆபத்து என பாகிஸ் தான் கருதியது. இதுவே ஒரு போருக்கு வழி வகுத்தது.

இந்தியாவின் உதவி

சுதந்திரம் பெற்று இரண்டுமாதங்கள் ஆகவில்லை. 1947, அக்டோபர் 22 அன்று ஆப்கானிஸ்தானின் முரட்டு மனிதர்களான பட்டான்களின் உதவியை பூஞ்ச் பகுதி கிளர்ச்சியாளர்கள் நாடினர். இதுதான் சமயம் என பாகிஸ்தானின் உளவுத்துறை பட்டான்களுக்கு உதவிகளை வழங்கியது.

பெரும் ஆயுதங்களுடன் பூஞ்ச் பகுதிக்குள் நுழைந்த பட்டானியர்கள் உக்கிரமாக போரிட்டனர். இரண்டே நாளில் வெகு வேகமாக முன்னேறிய பட்டான்கள் ஸ்ரீநகர் வரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எந்த நேரமும் ஸ்ரீநகரை அவர்கள் கைப்பற்ற லாம் என்ற நிலையில், மன்னர் ஹரி சிங் நடுநடுங்கினார்!

இந்தியாவின் உதவியை அவசரமாக வேண்டினார். அப்போது இந்தியாவுக்கு பிரதமராக நேரு இருந்தாலும், கவர்னர் ஜெனரலாக மௌன்ட்பேட்டன் பிரபுதான் இருந்தார்.

இந்தியா ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது. காரணம் காஷ்மீர் அப்போது, இந்தியாவுக்கு அண்டை நாடு. அண்டை நாட்டுக்குள் ராணுவம் நுழைந்தால் அது சர்வதேச பிரச்சினையாகிவிடுமே என யோசித்தது.
மௌன்ட் பேட்டன் பிரபு தலைமையில் 25.10.1947&ல் இந்திய பாதுகாப்பு சபையின் கூட்டம் கூடியது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் வேண்டு கோள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதாக சம்மதித்தால் தான் இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இணைந்தது காஷ்மீர்

காஷ்மீரிகளின் கருத்துக்களை கேட்பதற்கு அவகா சம் இல்லை. தலைநகர் ஸ்ரீநகருக்கு 35 கிலோ மீட்டர் து£ரத்தில் பட்டானியர்கள் வந்து விட்டார்கள்.

பதவியும், உயிரும் முக்கியம் என கருதிய மன்னர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவோடு தற்காலிகமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் 26.10.1947ல் சில நிபந்தனைக ளோடு கையெழுத்திட்டார். அடுத்த நாள் 27.10.1947ல் காஷ்மீர் “பிரிந்து போகும் உரிமையுடன்” கூடிய இந்தி யாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 28.10.1947ல் இந்திய ராணுவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இறங்கியது. காஷ்மீர் வரலாற்றில் புதிய சிக்கல்கள் தோன்றின.
ஒன்றுபட்ட காஷ்மீரில் நுழைந்த பட்டான்கள், இந்தி யப் படைகளால் விரட்டியடிக்கப்பட்டனர். ஒழுக்கமற்ற பட்டானியர்களின் கொடுமைகளை சகிக்காத காஷ் மீரிகள் பட்டானியர்களுக்கு எதிராகத் திரும்பியது இந்திய ராணுவத்திற்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது.

இந்தியப் படைகளை எதிர்கொள்ள, பட்டானியர்க ளுக்கு துணையாக பாகிஸ்தான் ராணுவமும் புறப்பட உலகம் அதிர்ந்தது. 1948 மே மாதம் இந்தியா, பாகிஸ் தான் இடையே முதல் போர் நடைபெற்றது. 1949 ஜன வரி 1&ல் ஐக்கிய நாட்டு சபை தலையிட்டு சமாதானம் செய்து வைக்கப்பட்டது.

காஷ்மீரில் பிரிவினை

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. கில் கிட், பூஞ்ச், பல்ஸிஸ்தான், முசாபராபாத், பள்ளத் தாக் கின் ஒரு பகுதி அடங்கியவை ஆசாத் காஷ்மீர் என்றும், எஞ்சிய பள்ளத்தாக்குப் பகுதிகள், ஜம்மு, லடாக் உள் ளிட்ட பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீர் என்றும் பிரிக்கப்பட்டது. இரண்டுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஐ.நா. மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆசாத் காஷ்மீருக்கு முசாபராபாத் தலைநகரானது. இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீருக்கு ஸ்ரீநகர் தலைநகரானது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ஆசாத் காஷ்மீரின் ஒருபகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது பாகிஸ்தான்.

ஒன்றுபட்ட காஷ்மீர் இப்போது இந்திய கட்டுப் பாட்டு காஷ்மீர் (வீஷீளீ), பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ் மீர் (றிளிரி), சீன கட்டுப்பாட்டு காஷ்மீர் (சிளிரி) என பிரிந்து கிடப்பதாக காஷ்மீரிகள் கவலைப்படுகிறார்கள். மூன்று நாடுகளும் வெளியேறி எங்கள் காஷ்மீரைநாங்களே ஆளவேண்டும் என்பதுதான் ஜம்மு- காஷ்மீர் முன்னணியின் விடுதலை முழக்கமானது.


எம். தமீமுன் அன்சாரி




நன்றி.சமுதாய ஒற்றுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக