அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 ஜூலை, 2012
காட்டுமன்னார் கோவிலில் பாத்திரக்கடையில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
காட்டுமன்னார் கோவில், ஜூலை.17-
காட்டுமன்னார் கோவில் கச்சேரி தெருவில் நடராஜன் என்பவர் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்த கடையின் அருகிலேயே இவரது வீடும் இருந்தது. பாத்திரக்கடையில் உள்ள பீரோவில் இவர் நகை மற்றும் பணத்தை வைத்திருந்தார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.
பாத்திரக் கடையின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 1/2 பவுன் நகை, ஒரு கொலுசு, 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இன்று காலை விழித்து கடைக்கு வந்த பார்த்த நடராஜன் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். பாத்திரக்கடையில் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக