அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 ஜூலை, 2012
மூங்கிலில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள்!
ஆசஸ் நோட்புக் லேப்டாப்பும் இங்கு மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டு்ள்ளது. இந்த பேம்பூ நோட்புக்கின் சில தொழில் நுட்பங்களை பார்க்கலாம். பேம்பூ நோட்புக் விண்டோஸ் விஸ்டா ஹோம் ப்ரீமியம் இயங்குதளம் கொண்டது. இது இன்டெல் கோர் 2 டியோ பிராசஸரையும் வழங்கும். 12.1 இஞ்ச் திரையினை கொண்டது. இந்த நோட்புக் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். மூங்கிலில் உருவாக்கப்பட்ட இந்த பேம்பூ நோட்புக், பேட்டரியுடன் சேர்த்து 1.57 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
உலகமே தொழில் நுட்பமாக மாறி கொண்டு வருகையில் இதனால் இயற்கையும் அழிந்து வருகிறது என்று ஒரு கருத்து வெளியாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை மூங்கிலில் படைத்திருக்கிறது. அதில் சில புதிய படைப்புகளை பார்க்கலாம்.
மூங்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஹெட்போனும் இந்த மூங்கில் படைப்பு பட்டிலில் உள்ளது. இந்த டிஜே ஹெட்போனில் துல்லியமான ஒலியினை கேட்க முடியும்.
இங்கு நாம் பார்ப்பது ஐபேம்பூ ஸ்பீக்கர்ஸ். மூங்கிலில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்பீக்கரை ஐபோன்-4 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். ஆனால் மூங்கிலால் ஆன இந்த ஸ்பீக்கரின் கீழ் பகுதி உருண்டை வடிவமாக உள்ளதால், இது சரிவர சம தரையில் அமருமா? என்பது கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் இயற்கை சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இது போன்ற புதுமையான படைப்புகள் வரவேற்கத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 டேப்லட்டினை பாதுகாக்கவும் ஒரு கேஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. வெர்ஸ் பேம்பூ ஐபேட்-2 கேஸ் பார்ப்பதற்கு மெலிதாக இருக்காது. கெட்டியான வடிவமைப்பை கொண்ட இந்த கேஸ் ஓர் புதிய ஐபேட்-2 டேப்லட்டிற்கு சிறந்த பாதுகாப்பினை வழங்கும்.
ஸ்மார்ட்போனுக்கென்று பிரத்தியேகமாக வெர்ஸ் கேஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேஸை ஐபோன்-4 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தலாம்.
கீபோர்டையும் மூங்கிலில் தயாரித்து இருக்கிறார்கள். புளூடூத் கீபோர்டான இதை ஐபேடில் பயன்படுத்தலாம். மூங்கிலால் ஆன இந்த புளூடூத் கீப்போர்டு எளிதாக அளிக்க கூடிய ஒரு பொருள். அதனால் இந்த கீபோர்டு சுற்று சூழலுக்கு எந்த வித மாசுகளையும் உருவாக்காது.
கீபோர்டு போன்றவற்றையே உருவாக்கும் நிறுவனங்கள், மவுஸை உருவாக்காதா என்ன? பேம்பூ மைஸை வழங்குகிறது பேம்பூக்கீ. இந்த பேம்பூ மைஸ் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் வடிவமைப்பிலேயே தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக