அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
14 ஜூலை, 2012
பலஸ்தீன்:15 வயது பெண் பஸர் உஸ்மான் மேற்கு கரை மேயர்!
14 Jul 2012 Bashaer Othman, Mayor of Tulkarm
ராமல்லா:உலகிலேயே மிகவும் வயது குறைந்த மேயர் என்ற சாதனையை ஃபலஸ்தீன் சிறுமி பஸர் உஸ்மான் சொந்தமாக்கியுள்ளார். வடமேற்கு மேற்கு கரையில் அல்லார் நகரத்தின் தற்காலிக மேயராக பஸர் உஸ்மான் மேயர் பதவிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இளைய சமூகத்தை சக்திப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் பருவத்தினரின் தலைமைத்துவ பண்பையும், நிர்வாக திறமையையும் வளர்த்துவதற்காக 2 மாத கால பதவிக்கு பஸர் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். பஸருக்கு தற்பொழுது கோடைக்கால பள்ளி விடுமுறையாகும்.
நிதித்துறை தவிர இதர அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் கையெழுத்திடுவது, பணியாளர்களை மேற்பார்வை செய்வது ஆகியன இந்த குட்டி மேயரின் அதிகார வரம்பிற்குள் வரும். அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் சூஃபியான் ஷாஹிதின் மேற்பார்வையில் பஸர் உஸ்மான் செயல்படுவார்.
மிகவும் விருப்பத்துடன் பஸர் உஸ்மானின் செயல்பாடுகளை உற்று கவனிப்பதாகவும், இளைய தலைமுறையின் திறமைகளும், தன்னம்பிக்கையும் நாட்டிற்கு தேவை என்றும் மேயர் ஷாஹித் கூறினார். தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை புதிய அனுபவமாக கருதி இதர இளைய தலைமுறையினருக்கும் எதிர்காலத்தில் இதைப்போன்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஊக்கத்தை அளிக்கும் என பஸர் உஸ்மான் நம்புகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக