அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது. நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் ஆகிய 4 அம்சங்களை சார்ந்துதான் இருக்கிறது. எந்த உணவை சாப்பிட வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும். முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால் நாம் இதை கடைபிடிப்பதே இல்லை. உணவில் பாசிட்டிவ் உணவு, நெகட்டிவ் உணவு என்று 2 வகை உண்டு. எளிதில் சீரணமாகக்கூடிய, வயிற்றுக்கு பிரச்னை தராத உணவுகள் - பாசிட்டிவ் உணவுகள். அதற்கு நேர்மாறானவை நெகட்டிவ் உணவுகள். பாசிட்டிவ் உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, டால்டா போன்ற ஒவ்வாமை பொருட்கள் கலந்த நெகட்டிவ் உணவுகளையே இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம்.
தண்ணீருக்கு நிகராக வேறு ஒரு பானம் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் தாகம் எடுக்கும் சமயங்களில் எல்லாம் நாம் பெரும்பாலும் ரசாயனம் கலந்த அன்னிய குளிர்பானங்களையே விரும்பி அருந்துகிறோம். இதனால் போதிய அளவு தண்ணீர் உடலுக்கு கிடைப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு இன்னல் அடைகிறோம். காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கூட காபி குடிக்கிறோம். மேலும் பன், பிஸ்கட் என்று சாப்பிடுகிறோம். நாள் முழுவதும் வடை, பஜ்ஜி என்று நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறோம். இன்றைய சூழலில் நம்முடைய உழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுத்துக்கொள்ளும் உணவோ அதிகமாக இருக்கிறது.
இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்ததல்ல. இந்த பழக்கம் தொடர்ந்தால் நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம். இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். நோய் வந்தால் நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் நம் உடலில் கழிவுத்தன்மையும், நச்சுத்தன்மையும் வெளியேறும் நிகழ்வுதான் நோய்ஆகும்.
நாம் உண்ணும் உணவு கழிவாக மாறிய பிறகு அது வெளியேற்றுகிறது. கழிவுகள் அதிகமாக சேரும்போது மலக்குடல் சுத்தமாக இருப்பதில்லை. அதுபோல நுரையீரலும் சுத்தமாக இருப்பதில்லை. அதில் இருக்கின்ற 90,000 சிரைகளில் 60,000 சிரைகளில் கார்பன்-டை-ஆக்சைடு படிந்து விடுகிறது. சருமத்தில் கூட கழிவுகள் தங்கிவிடுகின்றன. இவையெல்லாம் வெளியேறுகிற நிகழ்வுதான் நோய். கழிவுகள் சேராமல் தற்காத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக