அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2012
கொளுத்தும் வெயிலால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல்
கொளுத்தும் வெயிலால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை யில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நாள்தோறும் 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் பெரம்ப லூர், அரியலூர், செந் துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் பெய் யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக நீர் வரும். இது தவிர சாதாரண காலங் களில் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் கல்லணை வழியாக கீழணை வந்தடையும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெற்று வரு கின்றனர். இந்நிலையில் இந்த ஏரி கடந்த ஜன வரி மாதம் அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதன்பிறகு நீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட் டதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 42.20 அடியாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதி கமாக இருப்பதாலும், ஏரிக்கு முற்றிலும் நீர் வரத்து இல்லாததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.நேற்று மாலை நில வரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.50 அடியாக குறைந்தது.சென்னைக்கு 38 கன அடி நீர் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்னும் 1 வார காலத் திற்குள் ஏரி வறண்டு விடும். இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீராணம் ஏரியை நம்பி குறுவை நடவு செய்த விவசாயிகளும் மிகுந்த கலக்கத்தில், கவலையில் உள்ளனர். அதேபோல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுவதும் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக