அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஜூலை, 2012
கொடூர கொலைகாரன் "மோடி" : பா.ஜ.க.வினர் புதிய போஸ்டர் !
நரேந்திர மோடிக்கு எதிராக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும் முன்னாள் குஜராத் முதலமைச்சருமான, கேஷுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
"கொடுமைக்கார மாமியாராக" சித்தரித்து மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு கிடைத்த அமோக ஆதரவைத்தொடர்ந்து, தற்போது, நரேந்திர மோடியை "கொடூர கொலை காரன்" என்று போஸ்டர் போட்டுள்ளனர். இம்முறை, நரேந்திர மோடிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், பா.ஜ.க. கட்சியையும் குற்றம் சுமத்தி வாசகம் போட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் "ஹரேன் பாண்டியாவை" கொன்றது யார்? என்ற கேள்விக்கு நேரில் மோடியின் படத்தை போட்டுள்ளனர் "லைலா பென்னை" கொலை செய்தது யார்? என்ற வாசகத்துக்கு எதிரிலும் மோடியின் படத்தையே போட்டுள்ளவர்கள், RTI சமூக ஆர்வலர்களை கொன்றவர்கள் யார்? என்ற சொல்லுக்கு எதிரில் பா.ஜ.க. கட்சி சின்னமான "தாமரை"யை அச்சடித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நன்றி.மறுப்பு இணையதளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக