- அபு ஷம்ஷீர்
எதையும்
உண்ணாமல் இருப்பது
மட்டும் நோன்பல்ல...
கண்டதையும்
எண்ணாமல் இருப்பதே
நோன்பு...
ஏழையின் பசி அறிய
இந்த நோன்பென்றால்...
இம்மாதத்தில், ஏழைகளும்
நோன்பிருக்கும் காரணம் என்ன...?
இறைவன் அனுமதித்த
நான் சம்பாதித்த,
என் உணவையே
இம்மாதத்தில் உண்ணத் தடை
என்றால்...
மற்றவர்களின் பொருளை
மற்ற மாதங்களில்
இறைவன்
உண்ண அனுமதிப்பானா...?
சாப்பிடுவதைப் போல்
நடித்தால் பசியாறாது...
குவளையில் நீரில்லாமல்
குடித்தால் தாகம் தீராது...
சாப்பிடாமல் இருந்தால்
அதன் பெயர் நோன்பு அல்ல.
பட்டிணி...!
நோன்பின் கடமைகளை
செய்தால் தான் நோன்பு...!
கட்டுப்பாடு..,
இறைவழி செலவு..,
இறையச்சம்..,
இரவு நேரத் தொழுகை..,
தான தர்மம்..,
பாவ மன்னிப்பு..,
பிரார்த்தனை..,
இதுவே ரமளான் நோன்பு...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக