அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 ஜூலை, 2012
கர்நாடகா : துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கர்நாடகாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மக்கள் தங்கள் உயிர்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ்
கேட்டு வரலாறு காணாத வகையில், அதிகளவு விண்ணப்பித்து வருகின்றனர். துப்பாக்கி கொள்முதல் செய்வதோடல்லாமல், துப்பாக்கி சுடும் பயிற்ச்சியும் அதிகளவு எடுத்து வருகின்றனர். முன்பெல்லாம் வருடத்துக்கு 10 முதல் 15 நபர்கள் மட்டுமே துப்பாக்கி பெற
லைசென்ஸ் கோறுவர். ஆனால், தற்போது பெங்களூரு நகரத்திலிருந்து மட்டும் பல்லாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை 10 ஆயிரம் நபர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் லைசென்ஸ் பெற்றுள்ள அனைவருக்கும் 3 மாதத்துக்கொரு முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. 10 நாட்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கட்டணம் ரூ 800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகரில் 15 நிறுவங்களுக்கு விற்பனைக்கான லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முறையான ஆவணங்களுடன், நியாமான பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், 3 மாத காலத்துக்குள் லைசென்ஸ் வழங்கப்படும், என்று C.A.R.K.ன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவைப்படும் தோட்டாக்கள் உள்ளிட்ட நவீன ரக குண்டுகள் விற்கும் நிலையங்களும் பெங்களூருவில் செம்மையாக செயல்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக