அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2012
யூரோ கோப்பை கால்பந்து: அதிரடியான ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது ஸ்பெயின்
14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இணையானது யூரோ கோப்பை கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்து அணிகள் மட்டும் பங்கேற்கும். நடப்புத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தின.
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினும் மிக வலுவான இத்தாலியும் மோதின. மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தப் போட்டியின் தொடக்கத்தில் 14-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேவிட் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். இத்தாலி அணியினர் பதில் கோல் அடிக்க பெரும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் 41-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பர் மற்றொரு கோல் அடித்தார். இத்தாலியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிவி 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.
2-வது பாதியில் இத்தாலி வீரர்கள் எப்படியும் கோல் அடித்தாக வேண்டும் என்ற வெறியுடன் விறுவிறுப்பாக விளையாடினர். ஆனால் ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்துக் கொண்டே வந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. 83-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டோரஸ் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே 87-வது நிமிடத்தில் ஸ்பெயினின் மற்றொரு வீரர் ஜூவான் இன்னொரு கோல் அடிக்க ஸ்பெயின் அணியின் வெற்றி உறுதியானது. ஆனால் இத்தாலி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை.
ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக