அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
10 ஜூலை, 2012
இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது
ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கி பெறோர் எடுத்துச் சென்றதை எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்தது. இதையடுத்து அக்குழந்தையின் தாய்-தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர்.
எகிப்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி தங்களது 5 மாத குழந்தையுடன் வெள்ளிக்கிழமைவு ஷார்ஜா விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இருவரிடமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
நாட்டுக்குள் நுழைவதற்கான விசா இருந்தது. ஆனால் குழந்தைக்கு விசா இல்லை. இதையடுத்து இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமையன்றுதான் உரிய அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வந்தபிறகு முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் விசாரணை அதிகாரிகள் சென்ற பிறகு அந்த தம்பதியினர் ஒரு விபரீத முடிவை எடுத்தனர். தங்களிடம் இருந்த பேக்கில் குழந்தையை வைத்து பூட்டினர். பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற திட்டமிட்டனர். ஆனால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்களது உடைமைகளை எக்ஸ்ரே ஸ்கேனிங் செய்த போது குழந்தை போன்ற பொருள் உள்ளே இருப்பதை எக்ஸ்ரே ஸ்கேன் திரை காட்ட அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பேக்கை திறக்கச் சொன்னர். உள்ளே குழந்தை இருந்தது கண்டுபிடித்தனர். குழந்தைக்கு விசா இல்லாததால் தாங்கள் இப்படிச் செய்ததாக அந்த பெற்றோர் கூறினர். இதை ஏற்காத அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வ்கையில் இருவரும் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக