உலகப் பொருளாதார வீழ்ச்சியும், இஸ்லாமிய வங்கிகளின் எழுச்சியும்.
சவுதி அரேபிய கிழக்கு கரை நகரமான தம்மாம் அருகிலுள்ள ராகா பகுதியிலிருந்து சேவையாற்றி வரும் ராகா இஸ்லாமிய மையத்தின் தமிழ் பிரிவு சார்பில் கடந்த 10.07.12 அன்று ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், தற்சமயம் தம்மாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள த.மு.மு.க மூத்த தலைவர், முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'உலகப் பொருளாதார வீழ்ச்சியும், இஸ்லாமிய வங்கிகளின் எழுச்சியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதில், தற்கால வங்கிகளின் செயற்பாடுகளையும், இஸ்லாம் கூறும் பொருளாதார கொள்கைகளையும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் power point presentation மூலம் விளக்கிக்காட்டி உரை நிகழ்த்தினார்.
மேலும் தனது உரையில், இஸ்லாமிய வங்கி முறை எவ்வாறு இலாபகரமாக உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதனையும், அதனை ஆய்வு செய்து தான் முனைவர் பட்டம் பெற்றதையும், தற்சமயம் இக்கொள்கைகளைப்ப் பின்பற்றி சர்வதேச வங்கிகளான HSBC, Standard Charted Bank, Citybank போன்றவை தமது வங்கிகளில் ' இஸ்லாமிய சாளரங்கள் ' (Windows) அமைக்க முன் வந்துள்ள விஷயங்களையும் விபரமாக எடுத்துரைத்தார்.
மேலும் தனது உரையில், அரசியல் சாசனத்தையே பிரிட்டனைப் பார்த்து அமைத்துக்கொண்ட இந்தியா, பிரிட்டனில் இன்றும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை மட்டும் பின்பற்ற மறுப்பது ஏன்? எனக் கேட்டபோது அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.
அதேபோல், தனது கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய வங்கியின் தலைமை நிர்வாக அலுவலளர் திரு. சீத்தாராமனிடம் கலந்துரையாடியதையும், அவர் இந்திய அரசு கூட இஸ்லாமிய சாளரங்களை ஏற்படுத்தினால், கத்தார் போன்ற அரபு நாடுகள் முதலீடு செய்யத் தயாராக உள்ள விபரத்தை பாரதப் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
சிறப்புரையைத் தொடர்ந்து கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவையோரின் ஆர்வமிக்க கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும், பேராசிரியர் அவர்கள் சுவையாக விடையளித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.
குறுகிய கால அவகாசத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இஸ்லாமிய சென்டரின் அரங்கம் நிரப்பி வழித்தது. இந்திய பன்னாட்டுப் ப்ள்ளியின் நிர்வாக குழு தலைவர் திரு. திருநாவுக்கரசு, மேற்படி பள்ளியின் முன்னாள் நிர்வாக குழு தலைவர் திரு.பால முரளி, தமிழ்நாடு சமூக நல குழு தலைவர் திரு. சுரேஷ் பாரதி மற்றும் திரு.வாசு, தமிழ் சங்கத்தின் சார்பாக திரு. சிவகுமார், ஜமாதே இஸ்லாமி பிரமுகர் அத்தாவுல்லாஹ் ஸாஹிப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய மைய்யத்தின் சார்பாக, அதன் மேலாளர், பேராசிரியருக்கு பாராட்டுப் பத்திரமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக