அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
02 ஜூலை, 2012
என்னை கற்பழிக்க முயன்றனர் - ரூமி எம்.எல்.ஏ.
மேலும் ரவுடிகளின் தாக்குதலுக்கு ஆளான எனக்கு வெளிக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், உள் காயங்களும் உள்ளன,என்றார். எனது திருமண விஷயத்தில், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்படுகிறது. எனது முன்னாள் கணவனின் கொடுமை தாங்காமல், அவரை விட்டு பிரிந்து ஊரறிய-உலகறிய நடை பெற்ற எனது திருமணத்தை கொச்சை படுத்துவது, கவலை தருகிறது. இரண்டாம் திருமணத்தை முடித்த பிறகு முதல் முறையாக, தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தனது இரண்டாம் கணவருடன், தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் தங்கியிருந்த போது, முன்னாள் கணவனால் ஏவப்பட்ட குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாயினர், ரூமி- ஜாகிர் தம்பதியினர். சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், கூலிப்படையை ஏவிய அவரது முன்னாள் கணவரும் பாஜக நிர்வாகியுமான ராகேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக