#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

09 ஜூலை, 2012

உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (ரமளான் ஸ்பெஷல் பதிவு)

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே!


இறை திருப்தியைப் பெற வேண்டி, நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய புனித  
ரமளான்  மாதத்திலே.... நாம் அனைவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு, அதன்படி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 'உங்கள் வீட்டுப் பெண்களுக்காக'  என்ற றமழான் சிறப்பு பதிவு உங்களுக்காக....


ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
-அல்குர்ஆன் (2:185)
நோன்பின் சிறப்புக்கள் அதன் பலாபலங்கள் பற்றி ஒவ்வொரு றமழானிலும் நாம் அதிகம் அறிந்து கொண்டிருப்போம். ஆனால் அந்த மாதத்தில் நாம், குறிப்பாக பெண்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்று திட்டமிடுவது அரிதாகவே இருக்கின்றது. நோன்பு வந்தாலே இரட்டை வேலைப்பளு என்று அங்கலாயிக்கும் சகோதரிகளே..... உங்களுக்காகவே இந்த பதிவு.....

01. நோன்பு தொடங்கும் முன்னமே உங்களுடைய வீட்டில் வேலைகளை ஒழுங்குபடுத்த தொடங்குங்கள். உதாரணமாக சமயலறையை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அகற்றி விட்டு, சமையலுக்கு தேவையான பொருட்கள் என்ன அவசியமாக தேவை, அதிகமாக தேவைப்படும் போருட்கள் என்பதை முற்கூட்டியே பட்டியலிட்டு வாங்கி வைத்து விட்டால், நோன்பை நோற்றுக்கொண்டு அவசர தேவைக்காக கடைகளுக்கு செல்ல நேரிடும் அலைச்சலை தவிர்த்துக் கொள்ளலாம்.

02. வீடு மற்றும் அதன் சுற்று புறச் சூழலை வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சுத்தம் செய்யலாம். உங்கள் பணிகளில் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டால் அவர்களும் உற்சாகமாக இணைந்து கொள்வர். வீட்டு பொறுப்புணர்வு அவர்களிடம் வளரும். அது மட்டுமன்றி வேலை செய்யும் நேரத்தில் நோன்பு தொடர்பாக எளிதாக அவர்களுக்கு உணர செய்யலாம்.

03. வீட்டில் இருக்கும் மேலதிகமான ஆடை வகைகள், கற்றல் உபகரணங்கள் தேவையற்ற பட்சத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தி எடுத்து வைத்தால் சகாத்(கட்டாய தர்மம்) வழங்கும் போது அதனையும் சேர்த்து வழங்கலாம்.

04.
ரமளான்  நெருங்கி விடும் போது வீட்டின் வாசல் பகுதிகளில் "றமழானை இனிதே வரவேற்கின்றோம்" என்று (தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ) அழகான எளிமையான சுவரொட்டி தயார் செய்து ஒட்டிவிடலாம்.  இதனைச்செய்ய உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் அவர்களின் திறனும் வளரும்.   வீட்டிற்கு வரும் விருந்தினரும் 'தாங்களும் றமழானுக்காக தயாராக வேண்டும்' என்ற எண்ணம் வளரும்.

05. மேலும் நோன்பு வைப்பதற்கான தூஆ மற்றும் நோன்பு திறந்த பின் ஓதும் தூஆ போன்றவற்றையும் உணவு உண்ணும் அறையில் எழுதி சுவர்களில் ஓட்டி விடலாம்.   சிறிய திக்ர் அல்லது குர்ஆன் வசனங்களையும் அவ்வாறு பண்ணலாம்.

06.நோன்பு ஆரம்பித்த பிற்பாடு வீண் விரயம் அதிகமாகின்றது.  வீண் ஆடம்பர செலவுகளும் ஏற்படுகின்றது.  அதனை தவிர்க்க பல தரப்பட்ட உணவு வகைகளை தயாரிப்பதை தவிர்க்க வேண்டும்.     பசிக்கு மிஞ்சி சுவைக்கு உணவு உண்ணும் வழக்கம் நோன்பு காலங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.   இதனை தவிர்க்கலாம்.  இதனால் பெண்கள் அதிகமாக சமையல் தயாரிப்பதிலே தங்களின் நோன்பு காலத்தை வீணாக்கி விடுகின்றனர்.   அமல்கள் செய்யும் நேரத்தை விட உணவு தயாரிக்க செலவிடும் நேரம் அதிகமாவதை தவிர்க்க வேண்டும். 

07. உணவு தயாரிக்கும் வேளைகளில் சிறிய வானொலி ஒன்றை சமையல் அறையில் வைத்துக் கொண்டால், இஸ்லாமிய ஒளிபரப்புச் சேவை அல்லது குர்ஆனை ஆடியோவாக செவிமடுத்துக் கொண்டு பணியாற்றலாம்.

08. உறவுகளை பேணவும், நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளவும் நோன்பு உரிய காலமாக அமைகின்றது.   குடும்ப உறவுகள், அயலவர்களில் ஒருவரையேனும்  இப்தாருக்கு (
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) அழைக்கலாம்.

09.பெண்கள் அனைவரும் கூடி ஊர் வம்பு பேசுவதை றமழானிலேனும் தவிர்த்து நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.   அண்டை வீட்டார், உறவினர்களுடன்  இணைந்து பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணலாம்.    அதில் குழந்தைகளுடன் கஸ்டப்படும் தாய்மார்களுக்காக குழந்தைகளுக்கான இஸ்லாமிய கலை நிகழ்வுகளை றமழானை மையமாக வைத்து ஏற்பாடு பண்ணலாம்.

10. சகாத்( கட்டாய தர்மம்) வழங்கும் போது உரிய முறையில் வழங்க கணவனுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்.

11. 
ரமளான் இறுதி நாட்களில் பெருநாளுக்கான ஆடை வாங்கும் நேரத்தில், ஆடம்பரமாக ஆடை அணிவதை தவிர்த்து தேவையான ஆடைகளை அதிக விலை கொடுக்காது வாங்கும் போது,.... சென்ற பெருநாளை விட இந்த பெருநாளில் எவ்வளவு பணம் மீதி என்பதை கணக்கு பார்த்து..... ஒரு அனாதை குழந்தைக்கேனும் ஆடை வாங்கி கொடுக்க முயற்சி செய்வோமாக....

இன்ஷா அல்லாஹ் இதனை அனைத்தையும் இனிய முறையில் திட்டமிட்டு எமது றமழானை பயனுள்ள வகையில் சிறப்பாக்குவோமாக...

நல்ல அமல்களை(இறை வழிபாடு) செய்து எமது பாவங்களில் இருந்து மீண்டு புதிய மனிதர்காளாக மாற முயற்சி செய்வோமா?

முக்கிய குறிப்பு :- சகோதரர்கள் இப்பதிவை படித்தால் உங்கள் வீட்டு பெண்களுக்கு இதனை எத்தி வையுங்கள்.அவர்களின் நல்லமல்களில் உங்களுக்கும் பங்குண்டு.

உங்கள் சகோதரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக