ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மெற்றிக் பள்ளிகள் பக்கம் முழுமையாக சாய்ந்து தமிழக மாணவர்களை பற்றியோ, பாடத்திட்டம் பற்றியோ, நீதித்துறை பற்றியோ கவலையற்ற முட்டாள்தனமான செயலபாடுகளை கொண்ட அதிகாரிகளின் துணையுடன் தொடர்ச்சியாக செய்த ‘தவறுகளின்’ முடிவாக ‘உச்சநீதிமன்றத்தால் குட்டுப்பட்டு நிற்கின்றனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம், நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்திணை அமல்படுத்தவும், ஜூலை 22-ம் தேதிக்குள் தமிழக மாணவர்கள் யாவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
உத்தரவை பெற்ற அன்றே ‘தமிழக அரசு’ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என தமிழக அரசு வக்கீல் அறிவித்தார். நமது ‘யூனிட்டி மீடியா நியூஸ்’ இது குறித்து வெளிட்ட சமச்சீர் கல்வி – ஜெயலலிதா அரசிற்கு ‘உயர் நீதிமன்ற’ சவுக்கடி தீர்ப்பு – சமச்சீர் கல்வி விடயத்தில் தமிழக அரசின் தவறுகளால், லாபமடையும் திமுக மற்றும் தேமுதிக!!! என்று தலைப்பிட்ட செய்தியில், உச்சநீதிமன்றம் குறைவான நேரம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றால் தமிழக அரசுக்கு எதிரான நிலையை எடுப்பத்தற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதுபோன்ற, எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாமல், நீதித்துறை செயல்பாட்டை பற்றிய அலட்சியத்துடனும், தமிழக அரசின் சார்பில் ‘பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா மற்றும் கல்வித்துறை அமைச்சர்’ ஆகியோர் நேரடியாக சென்று செய்த மேல் முறையீட்டு மனுவில் முந்திய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட பாடத் திட்டம் தரமற்றதாக, பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடங்களுடன் இருப்பதால், நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதித்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரப்பட்டிருந்தது.
தமிழாக அரசின் இம்மனுவை இன்று விசாரணைக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடந்து, தீர்ப்பு வரவிருக்கும் நிலையிலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் முன்னோட்டத்தை இன்றே தெரியப்படுத்தியுள்ளதாக முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜெயலலிதா அரசு முந்தைய உச்சநீதிமன்ற ஆணைகளை காற்றில் பறக்க விட்டு, ‘சமச்சீர் புத்தக’ பக்கங்களை கிழித்து திருத்த முயன்றது, உயர்நீதிமன்ற ஆணைகளை மதியாமல் நடந்ததை உயர்நீதிமன்றம் பதிவு செய்தது மற்றும் ‘சமச்சீர் கல்வி’ பாட திட்ட குழுவில் ‘பாடத்திட்டம்’ பற்றிய அறிவில்லாத ‘ஐஏஎஸ் அதிகாரிகளை’ நியமித்தது என ‘தமிழக மாணவர்களின் கல்வியில் அக்கறையில்லாமல் மூன்று மாதங்களாக நடத்திய தொடர் கூத்துகளின் விளைவையே இப்போது அனுபவிக்கிறது என்பது தெளிவு.
நன்றி.தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக