அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
24 ஜூலை, 2011
தேவ்பந்த் பல்கலை. துணைவேந்தர் நீக்கம்
துணைவேந்தராக பொறுப்பு வகித்த குலாம் முகமத் வஸ்தான்வி
தேவ்பந்த் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தரூல் உலூம் மெüலானா தேவ்பந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து குலாம் முகமத் வஸ்தான்வி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக 60 வயதான முஃப்தி அப்துல் காசிம் நுமானி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கமிட்டி கூட்டத்தில் வாக்கெடுப்பு .நடத்தப்பட்டது. இதில் வஸ்தான்விக்கு எதிராக 9 ஓட்டுகளும், ஆதரவாக 4-ம் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் முஸ்லிம் மாணவர்களும் பயனடைந்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் வஸ்தான்வி கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அவர் அப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக