அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2011
மது அருந்த இளம் மனைவியை விற்ற கணவன்!
காசர்கோடு: மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி .இந்நேரம்
கேரளா காசர்கோடு மாவட்ட்த்தில் உள்ள நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், (வயது 29). ரப்பர் வெட்டி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இவருக்கும் அருகே உள்ள சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (வயது22), என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் பிரியா, கணவனால் தனக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில்,"எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே, நான்காண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக, பல்வேறு வழிகளில் கொடுமைப்படுத்தி வந்தார். சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார். பணம் கொடுக்காததால், என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதையடுத்து, மனோஜ் தன்னை வன்புணர்ந்து விட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி விட்ட மனோஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக, கேரள முதல்வர், மனித உரிமை கமிஷன், மகளிர் மேம்பாட்டு கமிஷனுக்கும் மனுக்கள் அனுப்பியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக