
கடந்த மாதம் 6ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கீழணைக்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி கீழணையில் இருந்து வீராணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வீராணத்திற்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏரியில் 507 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசனத்திற்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக நேற்று சிதம்பரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
உதவி செயற் பொறியாளர் ராமமூர்த்தி, விவசாய சங்க ரவீந்திரன், இளங்கீரன், கண்ணன், ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு 27ம் தேதி தண்ணீர் திறப்பது என்றும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 30ம் தேதி தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக