அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 ஜூலை, 2011
லிபியாவில் கிளர்ச்சியாளர் படை கமாண்டர் சுட்டுக்கொலை
பெங்காசி, ஜூலை. 29-
லிபியாவில் அதிபர் கடாபியின் ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ். தற்போது இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் படை கமாண்டராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவலை கிளர்ச்சியாளர்களின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அவரது மரணத்தை தொடர்ந்து பெங்காசி பகுதியில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே யூனுசை கடாபியின் ராணுவத்தினர் நேற்று கைது செய்து அழைத்து சென்று சுட்டுக் கொன்றதாக வதந்திகள் பரவின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக