அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 ஜூலை, 2011
கடனில் சிக்கி தவிக்கும் உலக வல்லரசான அமெரிக்கா !!
ஜூலை 20 :
உலகில் வல்லரசு என தம்பட்டம் அடித்து கொண்டு மற்ற நாடுகளை அடிமையாக்கும் எண்ணத்தில் வலம் வந்த அமெரிக்காவில் தற்போது கடன் சுமை அதிக அளவில் பாதிப்பை உண்டாக்க உள்ளது. அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.
இதில் அதிக அளவில் கவலை கொள்ளும் நாடாக சீனா உள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை சீனாவை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. மேலும் சீனாவை காப்பாற்றி கொள்ள அந்நாட்டு அரசிடம் மிக குறைவான வழிகளே உள்ளது.
மொத்த கடன் 14.3 டிரில்லியன் டாலர்
உலக வல்லரசான அமெரிக்காவின் தற்போதைய கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலராக உள்ளது. இதில் ஏறக்குறைய 8.5 % என்கிற விதத்தில் சீனா அமெரிக்காவிடம் கடன் பத்திரங்களாக அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான், பிரிட்டன் ஆகிய வளர்ந்த நாடுகள் அமெரிக்காவிடம் கடன் பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்கா பெரும் கடன் சுமையில் மூழ்க போவதை முன் கூட்டியே சீனாவுக்கு தெரியும் என்பது தான்.
2009 மார்ச் 12ம் தேதியில் சீனாவின் பிரதமர் அமெரிக்காவிற்கு அதிக அளவில் கடன் அளித்துள்ளதை பற்றி சீனா கவலை கொண்டுள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் கூறியதாவது, ” அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால் நம்பக தன்மையை நிலை நிறுத்துங்கள் , சீனாவின் சொத்துகளின் பாதுகாப்புக்கு உறுதி அளியுங்கள் என்றும் கூறினார்.
நன்றி.தமிழ்.யுனிட்டி மீடியா நியூஸ்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக