அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
27 ஜூலை, 2011
பிச்சாவரம் சுற்றுலா மையம்: அமைச்சர் ஆய்வு
சிதம்பரம், ஜூலை 26: சிதம்பரம் அருகே சுரபுண்ணைக் காடுகள் அடங்கிய பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
÷பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹோட்டல் சாராதாராம் நிறுவனத்தாரின் ஹோட்டல் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் விடுதி, கூட்ட அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
÷பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக தொலைநோக்கு கருவி மூலம் பிச்சாவரத்தின் சுரபுண்ணைக் காடுகளைப் பார்த்து மகிழ அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர பார்வையாளர் அரங்கை பார்வையிட்டு அங்கு சுற்றுலாப் பகுதிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வரைபடம் ஆகியவற்றை வைக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
÷பின்னர் படகுக் குழாமில் பயணிகள் அமரும் இடத்தை பார்வையிட்டு அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக சுத்தமான குடிநீர் வைக்க சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
÷அப்போது படகு இயக்குபவர்கள் 40 பேர், சக்திவேல் தலைமையில் அமைச்சருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.÷கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.மழைக்காலங்களில் வருமானம் இல்லாததால் மழைகால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.÷இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக படகு இயக்குபவர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்
. ÷பின்னர் அமைச்சர் கோகுலஇந்திரா நிருபர்களிடையே தெரிவிக்கையில், "பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தித் தருமாறு சமூகநலத் துறை அமைச்சர் செல்விராமஜெயம் கேட்டுக் கொண்டார்.÷அதனடிப்படையில் இன்றைய தினம் பிச்சாவரம் சுற்றுலா மையம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.÷சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
÷சென்னையிலிருந்து பிச்சாவரத்துக்கு வாரம் ஒருமுறை சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார்.
÷அமைச்சருடன் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை செயலர் வி.ஜெயக்கொடி, சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் ஏ.சி.மோகன்தாஸ், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, ஹோட்டல் சாரதாராம் நிர்வாக இயக்குநர் அரிமா ஆர்.எம்.சுவேதகுமார், மக்கள் - தொடர்பு அலுவர் போ.முத்தையா, சுற்றுலாத் துறை அலுவலர் ராமமூர்த்தி, மேலாளர் ஹரிஹரன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலர் எஸ்.முத்தையன், ஒன்றிய மாணவரணிச் செயலர் வி.சண்முகசுந்தரம், காத்தவராயசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக