அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 ஜூலை, 2011
இரண்டு நாள்கள் பத்திரிக்கைகள் புறக்கணிப்பு!!! லால்பேட்டை ஜமாஅத் அதிரடி....
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லால்பேட்டை காங்கிருப்பு பகுதியில் நடந்து கொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது,அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றும், வேண்டுமென்றேமோட்டார் சைக்கிளின் சப்தத்தை அதிகப்படுத்தி சொற்பொழிவுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார்.
அவரின் இந்த செயலை அந்தப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர்.உடனே முந்திக்கொண்ட ஆறுமுகம் காட்டுமன்னார்குடி காவல்நிலையத்தில் முஸ்லிம்கள் தம்மை சாமி கும்பிட அனுமதிப்பதில்லை என்றும் தம்மை வீடு புகுந்து தாக்க முனைந்தனர் என்றும் ஒரு புகார் ஒன்றை அளிக்கிறார்.
இதை போலவே ஜமாஅத் தரப்பிலிருந்து இடையுறு ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார் என்றும் ஒரு புகார் காட்டுமன்னார்குடிகாவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்படுகிறது. ஆறுமுகத்தின் மீதும் சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது இடையுறு ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார் என்றும் ஒரு புகார் காட்டுமன்னார்குடிகாவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்படுகிறது.இதனையடுத்து இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலரை காவல்துறை தேடி வருகிறது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனோர்முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க கான்கிருப்பு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் தினமலர்,தினத்தந்தி,தினகரன் போன்ற பத்திரிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷதுடனும் சமூக ஒற்றுமையை குலைக்கும வகையிலும்,முஸ்லிம்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செய்திகள் வெளியிட்டு வருவதை கண்டித்து,தினமலர்,தினத்தந்தி,தினகரன் ஆகிய இம்மூன்று பத்திரிக்கைகளையும் நாளை , நாளை மறுநாள்,( 2,3 , ஜூலை ) இரு தினங்களுக்கு வாங்காமல் புறக்கணிக்க வேண்டுமென்று லால்பேட்டை ஜமாஅத் முடிவு செய்துள்ளது. இந்த முடிவைஇன்று ஜுமுஆ தொழுகையின் போது அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக